வீட்டில் இருந்த படியே தினமும் ரூ.5,000 ஈசியாக சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?
TamilNadu Government: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஆரி மற்றும் தையல் பயிற்சியை அறிவித்துள்ளது.

பெண்களுக்கு இலவச ஆரி மற்றும் தையல் பயிற்சி
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (Tamil Nadu Corporation for Development of Women - TNCDW) என்பது தமிழக அரசின் சிறப்பு வாய்ந்த ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் பெண்களைச் சுய உதவிக்குழுக்களாக (Self Help Groups - SHGs) ஒருங்கிணைத்தல், பெண்களுக்குத் தேவையான வாழ்வாதாரப் பயிற்சிகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஆரி வேலைப்பாடு மற்றும் தையல் பயிற்சி வழங்குகிறது.
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்
இந்த பயிற்சியானது மாவட்ட வாரியாக உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (TNSRLM) மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களின் கலைத்திறனை ஊக்குவித்து, அவர்களைச் சிறுதொழில் முனைவோராக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கம்.
பயிற்சி காலம்
மொத்தம் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இடம்
அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற 'சமுதாயத் திறன் பயிற்சிப் பள்ளிகளில்' (Community Skill Training Centres) வகுப்புகள் நடைபெறும்.
தொடர்பு கொள்ள வேண்டிய விதம்
யாருக்கு முன்னுரிமை?
இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ள அனைத்துப் பெண்களும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், மகளிர் சுய உதவிக் குழுக்களில் (SHG) உறுப்பினர்களாக உள்ள பெண்களுக்குப் பயிற்சியில் சேர முன்னுரிமை வழங்கப்படும். தையல் கலை மற்றும் நவீன ஆரி வேலைப்பாடுகளில் அடிப்படை முதல் மேம்பட்ட நுணுக்கங்கள் வரை அனுபவம் வாய்ந்த வல்லுநர்களால் கற்றுத்தரப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய விதம்
இப்பயிற்சியில் இணைய விருப்பமுள்ள பெண்கள், தங்களின் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை (BDO Office) நேரடியாக அணுகி விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அங்குள்ள மகளிர் திட்டப் பிரிவு அலுவலர்களிடம் விண்ணப்ப படிவங்களைச் சமர்ப்பித்து உங்கள் சேர்க்கையை உறுதி செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெண்கள் தங்களின் கைவினைத் திறனை வளர்த்துக் கொண்டு, சொந்தமாகத் தொழில் தொடங்கி வருமானம் ஈட்ட அரசு வழிவகை செய்துள்ளது.
கல்வித் தகுதிகள்
விண்ணப்ப நடைமுறை விவரங்கள்
இலவசப் பயிற்சியானது பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை இலக்காகக் கொண்டிருப்பதால், இதற்கான விண்ணப்ப செயல்முறை மிகவும் எளிமையாக வைக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதிகள்
பொதுவாக எழுதபடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் (சில மாவட்டங்களில் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடிப்படையில் வழங்கப்படலாம).
வயது வரம்பு
18 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
* ஆதார் அட்டை (முகவரிச் சான்றாக).
* குடும்ப அட்டை (Ration Card).
* கல்விச் சான்றிதழ் (இருப்பின்).
* சுய உதவிக் குழு உறுப்பினர் அடையாள அட்டை அல்லது குழுவின் பெயர் விவரம்.
* பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (2 அல்லது 3).
* வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (ஊக்கத்தொகை ஏதேனும் வழங்கப்பட்டால் அதற்குத் தேவைப்படும்).
தினமும் ரூ.5000 சம்பாதிக்கலாம்
விண்ணப்பிக்கும் முறை
உங்கள் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு (BDO Office) செல்லவும். அங்குள்ள 'மகளிர் திட்ட' (TNSRLM - Tamil Nadu State Rural Livelihoods Mission) அலுவலகப் பிரிவைத் தொடர்பு கொள்ளவும். அங்கிருக்கும் வட்டார இயக்க மேலாளரிடம் (Block Mission Manager) பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தைக் கேட்டுப் பெறவும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஆவணங்களை இணைத்துச் சமர்ப்பிக்கவும்.
பயிற்சியின் பயன்கள்
பயிற்சியின் முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். சுயதொழில் தொடங்கத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வங்கிக் கடன் (Bank Loan) பெறுவதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படும். ஆரி வேலைப்பாடு மற்றும் தையல் மூலம் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் வாய்ப்பு உருவாகும். இதனால் நவீன டிசைன்களை உருவாக்குவதன் மூலம் ஒரு பெண் தொழில்முனைவோராக தினமும் ரூ.5,000 வரை சம்பாதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

