மணல் கொள்ளை மர்மம்: மீண்டும் மும்மூர்த்திகள் ? வெளியான பகீர் தகவல்
தமிழகத்தில் மணல் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அமலாக்கத்துறை ரெய்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளை ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
SAND
மணல் கொள்ளை- அமலாக்கத்துறை சோதனை
தமிழகம் முழுவதும் மணல் கொள்ளைகள் முழ்வீச்சில் அரங்கேறி வருவதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. மணல் அதிகம் அள்ளியதால், பல ஆறுகளில் நீரோட்டம் பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வண்டல் மண் அள்ள அரசு அறிவித்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல், வணிக ரீதியாக கிராவல் மண் கொள்ளையடிக்கப்படுகிறது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கனிம வளம் திருடு போவது கண்காணித்து தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளும் வேடிக்கை பார்ப்பதாக புகார் வந்தது.
இந்தநிலையில் தான் பல்லாயிரம் கோடிக்கு சட்டவிரோத வரி ஏய்ப்பு மற்றும் மணல் கனிமவளக்கொள்ளை நடைபெற்றதின் அடிப்படையில் அமலாக்கத்துறை மேற்கொண்ட ரெய்டுகளின் போது சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது.
SAND LORRY
ஆட்சியர்களிடம் விசாரணை
மேலும் இது தொடர்பாக முக்கிய ஆதாரங்களும் கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டு வழக்கு பதியப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி தீவிர விசாரணை நடைபெற்றது. மத்திய அமலாக்கத் துறை 4730 கோடி ரூபாய் அளவிற்கு மணல் கொள்ளையின் ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கரிகாலன், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகிய மும்மூர்த்திகள் தான் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மணல் விற்பனையில் கொடி கட்டி பறந்து வருகின்றனர். அமலாக்கத்துறை நெருக்கடி காரணமாகவும் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டது.
KARIKALAN
ஒதுங்கிய மூவர் அணியினர்
இதன் காரணமாக கடந்த ஆண்டு முதல் கரிகாலன், ரத்தினமும் மணல் தொழிலில் இருந்து சற்று விலகி நின்றனர் என்பதை விட அரசின் தலைமையானது விலக்கி வைத்தது. இந்த சூழ்நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜப்பாவிற்கு மணல் டெண்டர் ஒதுக்கப்பட்ட நிலையில், அவரால் தொடர்ந்து சரியான முறையில் மணல் பிசினஸ் செயல்படுத்த முடியாத அளவிற்கு பல குடைச்சல்களை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்ட முடியாமல் தவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் சில மாதங்களாக அமைதி காத்த மும்மூர்த்திகள் தற்போது மீண்டும் மணல் விற்பனையில் ஈடுபட தொடங்கியிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
SAND
மீண்டும் டெண்டர் மும்மூர்திகளுக்கு டெண்டர்.?
கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மும்மூர்த்திகளான ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலன் தங்களுக்கு இந்த தொழில் வேண்டாம் என்று ஒதுங்கிய போதிலும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் ஒப்புதலோடு மீண்டும் மணல் காண்ட்ராக்ட் இவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.