- Home
- Tamil Nadu News
- ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்.! யார் மீது தவறு.? நடந்தது என்ன.? ரயில்வே விளக்கம்
ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்.! யார் மீது தவறு.? நடந்தது என்ன.? ரயில்வே விளக்கம்
ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என ரயில்வே அறிக்கை தெரிவிக்கிறது. விபத்து நடந்தபோது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததாகவும், சிக்னல்கள் சிவப்பு நிறத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் தண்டவளாத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்
ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தது. இதே போல மீண்டும் ஒரு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்த போது .
பூவனூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பள்ளி வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் காயம் அடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ரயில் வராத காரணத்தால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விபத்திற்கு காரணம் என்ன.?
இன்று காலை 07:57 மணிக்கு புவனூரில் உள்ள (உளுந்தூர்பேட்டைக்கும் விருத்தாசலம் நிலையத்திற்கும் இடையில்) லெவல் கிராசிங் கேட்டில் எண். 163 ஐ கடக்கும்போது, தனியார் வேன் ஓட்டுநரின் அதிவேக மற்றும் அலட்சியத்தின்ன் காரணமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. எனவே இந்த விபத்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டது,
மேலும் மாணவர்களுக்கு இந்த விபத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல்துறையினரால் ஓட்டுநர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் அவர் கைது செய்யப்படவுள்ளார்.
லெவல் கிராசிங் பணியாளர்கள்
லெவல் கிராசிங் பணியாளர்களால் நிரப்பப்பட்டு, இன்டர்லாக் செய்யப்பட்டு, சிக்னல்களால் பாதுகாக்கப்படுகிறது. எனவே இந்த விபத்து சம்பவம் நடந்த நேரத்தில், கேட் செயல்பாட்டு விதிகளின்படி சாலைப் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. மேலும் இருபுறமும் ரயில் சிக்னல்கள் சிவப்பு நிறத்தில் இருந்தன.
மேலும் வாயில்களுக்கு இடையேயான சாலை மேற்பரப்பு நல்ல நிலையில் உள்ளது , லெவல் கிராஸிங்கில் உள்ள வாயிலின் இருபுறமும் வேகத் தடைகள் மற்றும் சரியான எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை. லெவல் கிராசிங் வாயில் இன்டர்லாக் செய்யப்பட்டிருப்பதால், வாயில்கள் மூடப்பட்ட பின்னரே ரயில்களுக்கான சிக்னல்கள் பச்சை நிறமாக மாற முடியும்.
எந்த சேதமும் ஏற்படவில்லை
இந்த விபத்தில் இன்டர்லாக் உபகரணங்கள் அல்லது ரயில்வே சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. தண்டவாளப் பகுதிக்கு வெளியே உள்ள வேலியின் ஒரு பகுதி மட்டுமே சிறிய சேதத்தை சந்தித்தது. இதனையடுத்து திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி, அதிகாரிகளுடன் சேர்ந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு சம்பவம் குறித்து ஆய்வு செய்தார்.
ரயில்வே லெவல் கிராசிங் வாயில்களைக் கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு, குறிப்பாக வாகன ஓட்டுநர்களுக்கு ரயில்வே வேண்டுகோள் விடுக்கிறது என அந்த அறிக்கையநில் தெரிவிக்கப்படுடள்ளது.