MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சீமானை தூக்கிப்போட்ட விஜய்.! திருமாவுடன் கூட்டணி-தேர்தலுக்கு இப்பவே சூப்பர் பிளான் போட்ட தவெக

சீமானை தூக்கிப்போட்ட விஜய்.! திருமாவுடன் கூட்டணி-தேர்தலுக்கு இப்பவே சூப்பர் பிளான் போட்ட தவெக

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி, 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு உண்டு என்றும் அறிவித்தார். இது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜய்யின் அறிவிப்பை வரவேற்றுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 28 2024, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
politician vijay

politician vijay

அரசியலில் களம் இறங்கிய விஜய்

தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக திமுக மற்றும் அதிமுக மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இந்த கட்சிகளுக்கு எதிராக தொடங்கிய பல கட்சிகள், குறிப்பாக நடிகர்கள் தொடங்கிய கட்சிகள் கடைசியில் அந்த கட்சிகளோடே கூட்டணி வைக்கும் நிலை உருவானது. தமிழகத்தில் அந்த அளவிற்கு அடித்தளம் அமைத்து உள்ளது திராவிட கட்சிகள். இந்தநிலையில் திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக பெற்று வருகிறார்.

அதனை உதறி தள்ளிவிட்டு அரசியலில் களம் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவர், தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். இதனையடுத்து தனது முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியையும் அறிவித்து திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

விஜய் பிரம்மாண்ட அரசியல் மாநாடு

நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற மாநாட்டில் பல லட்சம் மக்கள் திரண்டனர். மக்கள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கை, கூட்டணி என அதிரடியாக அறிவித்தார். குறிப்பாக 2026ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாகவும், தனி மெஜாரிட்டி கிடைக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எங்களை நம்பி கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

மேலும் அரசியலில் கோபத்தோடு, ஆக்ரஷத்தோடு பேச வேண்டியதில்லையெனவும் கூறினார். மேலும் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்த்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து என தெரிவித்தார்.இதனால் விஜய்யோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டிய திட்டமிட்ட சீமானுக்கு அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.

35
seeman

seeman

சீமானுக்கு எதிராக விஜய்

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே தம்பி, தம்பி என அன்பாக பேசிய சீமானுக்கு செக் வைத்துள்ளார் விஜய், தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் பேச்சு தொடர்பாக சீமான் கூறுகையில், எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது விஜய் முடிவு,  திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. கருவாட்டு சாம்பார் என்பதுபோல் தான் இருக்கிறது என விமர்சித்தார். என் பயணம் என் கால்களை நம்பித்தான். யார் காலையும் நம்பி பயணிக்காதவன் நான் என சீமான் தெரிவித்தார். எனவே வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை விஜய் கைப்பற்றக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

45
Aadhav Arjuna

Aadhav Arjuna

ஆதரவு தெரிவித்த விசிக

இதனிடையே விஜய்யின் பேச்சு விடுதுலை சிறுத்தைகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில்  விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி ஆதவ் அர்ஜூன் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது.

 அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் திரு. விஜய். அவருக்கு வாழ்த்துகள்.  ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என கூறியுள்ளார். 

55
Aadhav Arjuna

Aadhav Arjuna

தமிழகத்தில் கூட்டணி மாறுமா.?

ஏற்கனவே ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை எழுப்பி வரும் விடுதலை சிறுத்தைகளுக்கு சூப்பர் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்  அம்பேத்கர் தனது கட்சியில் மூத்த தலைவர் வழிகாட்டி என கூறியுள்ளார். எனவே விடுதலை சிறுத்தைகளின் மனநிலையை பொறுத்துவரை திமுகவுடன் கூட்டணி அமைத்தால் 10 இடங்களுக்கு மேல் கிடைக்காது. இதுவே விஜய் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டால் குறைந்தது 20 இடங்களில் போட்டியிட வாய்ப்பு உருவாகும் என நினைக்க தொடங்கியுள்ளனர். எனவே வரும் நாட்களில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தொல். திருமாவளவன்
அரசியல்
திமுக
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
Recommended image2
Now Playing
'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
Recommended image3
Now Playing
முரசு புயல் எச்சரிக்கை: சென்னை மாநகராட்சியின் ICCC மையம் மூலம் தீவிர கண்காணிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved