- Home
- Tamil Nadu News
- பிரசார மேடையில் மனைவி சங்கீதா குறித்து பேசிய விஜய்.. ரசிகர்களை அதிர வைத்த 'அந்த' ட்விஸ்ட்!
பிரசார மேடையில் மனைவி சங்கீதா குறித்து பேசிய விஜய்.. ரசிகர்களை அதிர வைத்த 'அந்த' ட்விஸ்ட்!
திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் இந்த பிரசாரத்திற்கு தடை விதித்து இருப்பார்கள். திமுக நமக்கு எவ்வளவு நெருக்கடிகள் அவதூறுகள் செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று விஜய் தெரிவித்தார்.

சூடுபிடித்த தமிழக தேர்தல் களம்
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக மற்றும் தவெக என அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றன. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகரும், தவெக தலைவருமான தலைவர் விஜய், சீமான், திருமாவளவன் என அனைத்து தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய்யிடம் விவகாரத்து கேட்ட சங்கீதா
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், நெல்லை கேடிசி நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதன்முறையாக மனைவி சங்கீதா குறித்து பேசினார். அதாவது நடிகர் விஜய்யை விவகாரத்து செய்ய அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ''விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு உள்ளது. அந்த நடிகையுடன் இருந்த தொடர்பு 2021ம் ஆண்டு ஏப்ரலில் எனக்கு தெரியவந்தது. அந்த நடிகையுடன் விஜய் வெளிநாடுகளில் சுற்றினார். அந்த நடிகையால் நானும், எனது குழந்தைகளும் அவமானத்தை சந்திக்க நேரிட்டது. ஆனால் சிறிதும் மன வருத்தமும் இல்லாமல் விஜய் அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்து வந்தார்.
விஜய் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்த விஷயம் தெரிந்தவுடன் விஜய்யுடன் பேசியபோது நடிகையுடன் தொடர்பை முறித்து விடுவதாக தெரிவித்தார். ஆனாலும் அவர் சொன்னதை செய்யாமல் நடிகையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். நடிகையுடனான தொடர்பு குறித்து கேட்டதால் என்னை வீட்டிலேயே முடக்கி எனது சுதந்திரத்தை தடுத்தார். என்னுடன் தாம்பத்ய உறவும் மேற்கொள்ள அவர் விரும்பவில்லை'' என்று சங்கீதா பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார். தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வெளியிடுவேன் என்று சங்கீதா கூறியிருந்தார்.
மறைமுகமாக பேசிய விஜய்
ஒரு பிரபலமான நடிகரும், அரசியல் தலைவருமான விஜய் மனைவிக்கு துரோகம் கிடைத்துவிட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இந்த விவகாரம் குறித்து விஜய் வெளிப்படையாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் நெல்லை பிரசார பொதுக்கூட்டத்தில் மனைவி விபத்து கேட்டது குறித்து மறைமுகமாக பேசி உள்ளார் விஜய்.
திமுகவும், பாஜகவும் ஒன்று தான்
அதாவது பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், ''திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் இந்த பிரசாரத்திற்கு தடை விதித்து இருப்பார்கள். திமுக நமக்கு எவ்வளவு நெருக்கடிகள் அவதூறுகள் செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவும் பாஜகவும் ஒன்றுதான் அவர்கள் வெளியே தான் பெயருக்கு கூட்டணி வைத்துள்ளார்கள் தவிர உள்ளுக்குள் ஒன்றாக உள்ளனர். அவர்களின் ஒரே நோக்கம் மக்களுக்காக உழைக்க எந்த விஜய் வந்து விடக்கூடாது என்பது தான். நான் வந்து விட்டதால் இனிமேல் ஊழல் செய்ய முடியாது என்பதால் என் மீது கடும் கோபம் கொண்டு உள்ளனர்.
எத்தனையோ கட்டுப்பாடுகள்
இதனால் என் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர். கரூர் விஷயத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் என் மீது விட்டு பழி போட்டார்கள். அது மக்களிடம் விடுபடவில்லை என்பதால் ஜனநாயகன் படத்தை உடைக்கலாம் என கனவு கண்டார்கள். தொடர்ந்து நான் மக்களை சந்திக்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்கள். எத்தனையோ கட்டுப்பாடுகளுக்கு பிறகு நான் மக்களை சந்தித்து வருகிறேன்.
தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்பாக அவதூறு
இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் காத்திருந்து தேர்தலுக்கு வெறும் 30 நாட்களுக்கு முன்பாக என்னை சுற்றி இருப்பவர்கள் வைத்து எனக்கு எதிராக அவதூறு பரப்பினார்கள். அது என்னவென்று உங்களுக்கு தெரியும். அதுவும் மக்களிடம் விடுபடவில்லை'' என்று மனைவியின் பெயரை குறிப்பிடாமல் விஜய் மறைமுகமாக பேசினார். பிரசார மேடையில் மனைவி சங்கீதா குறித்து விஜய் மறைமுகமாக பேசி உள்ளது அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.

