MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுக எம்.எல்.ஏ.வின் கொடூர செயல்.. ஆதாரம் இருந்தும் வேடிக்கை பார்க்கும் முதல்வர்.. விஜய் ஆவேசம்!

திமுக எம்.எல்.ஏ.வின் கொடூர செயல்.. ஆதாரம் இருந்தும் வேடிக்கை பார்க்கும் முதல்வர்.. விஜய் ஆவேசம்!

தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர் என்று விஜய் கூறியுள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 04 2026, 06:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
செய்தியாளர்களை கொடூரமாக தாக்கிய திமுக எம்.எல்.ஏ
Image Credit : Asianet News

செய்தியாளர்களை கொடூரமாக தாக்கிய திமுக எம்.எல்.ஏ

கனிமக்கொள்ளையை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி மற்றும் அவரது ஆட்கள் கொடூரமாக தாக்கிய காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தொகுதி மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஒரு எம்.எல்.ஏ.வே ரவுடி போன்று செயல்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தவெக தலைவர் விஜய் கண்டனம்
Image Credit : our own

தவெக தலைவர் விஜய் கண்டனம்

திமுக எம்.எல்.ஏ.வின் கொடூர செயலுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. 

குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது.

ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.

34
தமிழ்நாடே பாதுகாப்பில்லாமல் உள்ளது
Image Credit : Asianet News

தமிழ்நாடே பாதுகாப்பில்லாமல் உள்ளது

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி'' என்று தெரிவித்துள்ளார்.

44
அன்புமணி எழுப்பிய கேள்வி
Image Credit : Asianet News

அன்புமணி எழுப்பிய கேள்வி

மேலும் செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். ''ஆளுங்கட்சிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு காவல் படைகளை அனுப்பி கைது செய்யும் காவல்துறை, கனிமக்கொள்ளையை அம்பலப்படுத்தியவர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தயங்குவது ஏன்? திமுகவில் உறுப்பினராக இருந்தால் அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய உரிமம் பெற்றதாக பொருளா?'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
மு. க. ஸ்டாலின்
திமுக
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
Recommended image2
1 ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க ராஜினாமா பண்றேன்... உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகிரங்க சவால்!
Recommended image3
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Related Stories
Recommended image1
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய், ஒரு விஜி ஓட்டு போடுவாங்க‌.. ஏன்டா இவன கூப்பிட்டோம்னு வருத்தப்படுவீங்க.. விஜய் மாஸ் பேச்சு!
Recommended image2
திமுக, அதிமுக கலக்கம்.. நடுநிலை வாக்காளர்களை இழுக்கும் விஜய்.. இளைஞர்கள் ஓட்டும் திரும்புது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved