- Home
- Tamil Nadu News
- இன்னும் நாங்க அடிக்க ஸ்டார்ட் பண்ணவே இல்லை..! அதுக்குள்ள திமுக அலறினா எப்படி? விஜய் அட்டாக்
இன்னும் நாங்க அடிக்க ஸ்டார்ட் பண்ணவே இல்லை..! அதுக்குள்ள திமுக அலறினா எப்படி? விஜய் அட்டாக்
காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பில், தவெக தலைவர் விஜய் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்ததாக குற்றம் சாட்டிய அவர், விமர்சனம் ஆரம்பிக்கும் முன்பே அலறினால் எப்படி என்று கேள்வி எழுப்பினார்.

திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்
செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்ந்த கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த துயர சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்துக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சியினர் எந்தவொரு பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்தனர். பின்னர், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அறிவித்திருந்த ரூ.20 லட்சம் நிவாரணத்தொகையை விஜய் ஆன்லைன் வழியாக வழங்கினார். அதற்கு பின்னர், அந்த குடும்பங்களை நேரில் சந்திக்கும்படி மாமல்லபுரத்துக்கு அழைத்து, ஆறுதல் கூறியும், ஆதரவாக இருப்பேன் என்று உறுதியளித்தார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, “தவெக பயணம் தொடரும்” என்று விஜய் அறிவித்தார். மக்கள் கூட்டங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 4,000 பேர் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. இந்த அணிக்கு முன்னாள் ராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கீழ் பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னைக்கு அருகிலுள்ள செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் தினமும் சுமார் 100 பேருக்கு இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
இதற்கிடையில், விஜய் தனது அடுத்த பொதுக்கூட்டத்தை டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் நடத்த முடிவு செய்தார். அதற்காக மூன்று இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டது. ஆனால், அந்த நாளில் கார்த்திகை தீபம் நடைபெறுவதால், பொதுக்கூட்ட நாளை மாற்றுமாறு காவல்துறை பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி தவெக சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் ஆளும் கட்சியான திமுகவை வெளுத்து வாங்கினார். விழாவில் பேசிய அவர், “
மக்களுடன் செல் என்ற அண்ணாவின் கொள்கைபடி அரசியலுக்கு வந்துள்ளோம். அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? தனிப்பட்ட முறையில் திமுக மீது எந்த வன்மமும் இல்லை.
மக்களை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? நடிப்பவர்களையும் நாடகமாடுவர்களையும் கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை.
ஆரம்பிக்கும் முன்பே அலறினால் எப்படி? திமுக தனது கொள்கைகளை அடகு வைப்பதாக விஜய் விமர்சனம் வைத்தார். விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படி? என்று ஆளும் கட்சியான திமுகவை வெளுத்து வாங்கினார் தவெக தலைவர் விஜய்.

