MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கடைசியில் சொன்ன 'அந்த' ஒரு வார்த்தை..! அதிமுக, பாஜக கனவை மொத்தமாக முடிச்சு விட்ட விஜய்!

கடைசியில் சொன்ன 'அந்த' ஒரு வார்த்தை..! அதிமுக, பாஜக கனவை மொத்தமாக முடிச்சு விட்ட விஜய்!

Vijay Shatters AIADMK-BJP Dreams: தவெக பொதுக்குழுவில் 'முதல்வர் வேட்பாளர் விஜய் தான்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விஜய்யும் திமுக, தவெக இடையே தான் போட்டி என்று கூறியுள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Nov 05 2025, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தவெக பொதுக்குழு கூட்டம்
Image Credit : our own

தவெக பொதுக்குழு கூட்டம்

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் மாமல்லபுரம் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விஜய் பழையபடி கட்சி பணிகளை முடுக்கி விட்டார். இந்த நிலையில், தவெக பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதல்வர் ஸ்டாலின் மீது விஜய் விமர்சனம்
Image Credit : our own

முதல்வர் ஸ்டாலின் மீது விஜய் விமர்சனம்

பொதுக்குழு கூட்டத்தின் இறுதியில் பேசிய தவெக தலைவர் விஜய், கரூர் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விளாசினார். தவெக மீது வன்மம் கொண்டு முதல்வர் சட்டப்பேரவையில் பேசியதாகவும், தவெகவுக்கு எதிராக முதல்வர் அவதூறு பரப்பியதாகவும் குற்றம்சாட்டினார். குடும்ப உறவுகளை இழந்ததால் வலியுடனும், வேதனையுடனும் இருந்ததால் இவ்வளவு நாள் அமைதி காத்ததாகவும் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

கரூர் விவகாரத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதத்தை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தியதாகவும், அவசரம் அவசரமாக ஒரு நபர் விசாரணை அமைத்தது ஏன்? அந்த ஆணையத்தை அவமதிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தது ஏன்? என திமுக அரசை பார்த்து உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தது என்று விஜய் தெரிவித்துள்ளார்.

34
திமுக, தவெக இடையே தான் போட்டி
Image Credit : Asianet News

திமுக, தவெக இடையே தான் போட்டி

தொடர்ந்து பேசிய விஜய், ''நான் மீண்டும் சொல்கிறேன் வரும் தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி. இந்த போட்டி இன்னும் ஸ்ட்ராங் ஆக இருக்கும்'' என்று கூறினார். விஜய் சொன்னதை கேட்டதும் கூட்டத்தில் இருந்த தவெக நிர்வாகிகள் ஆர்ப்பரித்தனர். ஆனால் விஜய்யின் பேச்சு அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே அதிருப்‍தியை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளையார் சுழி போட்டிருந்த இபிஎஸ்

ஏனெனில் கரூர் விவகாரத்தில் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் விஜய்க்கு எதிராக நிற்க, அதிமுகவும், பாஜகவும் ஆதரவாக நின்றன. இந்த விவகாரத்தில் விஜய் பக்கம் நின்று திமுக அரசை வெளுத்தெடுத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதனால் தவெக தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பேசத் தொடங்க, இபிஎஸ்ஸும் இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தார்.

44
அதிமுக, பாஜக ஏமாற்றம்
Image Credit : Asianet News

அதிமுக, பாஜக ஏமாற்றம்

ஆனால் இன்று தவெக பொதுக்குழுவில் 'முதல்வர் வேட்பாளர் விஜய் தான்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விஜய்யும் திமுக, தவெக இடையே தான் போட்டி என்று கூறியுள்ளார். இதனால் தவெக தலையில் கூட்டணி அமையப் போவது உறுதியாகியுள்ளது. எப்படியாவது விஜய்யை கூட்டணியில் சேர்த்து விடலாம் என அதிமுகவும், பாஜகவும் கணக்கு போட்டிருந்தது. ஆனால் விஜய் தனது பேச்சின் மூலம் இவர்களின் கூட்டணி கனவுகளை மொத்தமாக முடிச்சு விட்டுள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
tvk நெரிசல்
எடப்பாடி பழனிசாமி அதிமுக
தமிழ்நாடு
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)259/7
INDIND
(16.0 ov)144/8
IND need 116 runs in 24 balls
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(75.0 ov) 329 & 202/5
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மின் தட்டுப்பாடு, ₹6,000 கோடி உபகரணங்கள் வீணடிப்பு: TVK அரசை கடுமையாக தாக்கிய மு.க.ஸ்டாலின்!
Recommended image2
Now Playing
பசும்பொன் தேவர் குருபூஜை: வைகோ நேரில் மலரஞ்சலி!
Recommended image3
Now Playing
இந்த ஆட்சி எப்போ ஒழியும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர் - பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு !
Related Stories
Recommended image1
அவசரமாக ஒரு நபர் ஆணையம் அமைத்தது ஏன்? திமுக அரசிடம் கேள்விகளை அடுக்கிய விஜய்!
Recommended image2
தனிநபர் ஆணையத்தை தலையில் கொட்டி வீட்டிற்கு அனுப்பிய நீதிமன்றம் - பொதுக்குழுவில் விஜய் மாஸ் ஸ்பீச்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved