MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 100 அடி குழி குணா குகை.! ரீல்ஸ் லைக்குக்காக செல்ல முயன்ற இளைஞர்.! வெளியான அதிர்ச்சி வீடியோ

100 அடி குழி குணா குகை.! ரீல்ஸ் லைக்குக்காக செல்ல முயன்ற இளைஞர்.! வெளியான அதிர்ச்சி வீடியோ

கொடைக்கானலில் பிரபலமான குணா குகையில் இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வேலிகளுக்கு நடுவே சென்று வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரை பணயம் வைத்து சமூக வலைதள பிரபலத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

2 Min read
Ajmal Khan
Published : Jun 09 2025, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல்
Image Credit : our own

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல்

மலையின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளியூரில் இருந்து வந்து செல்கிறார்கள். அந்த வகையில் கொடைக்கானலில் பல்வேறு இயற்கை அழகு மிகுந்த சுற்றுலா தளங்கள் ஏராளமாக இருந்தாலும் முக்கிய சுற்றுலா தளமாக இருப்பது குணா குகையாகும். நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படம்.

இந்த மலையில் உள்ள குகையில் எடுக்கப்பட்டதாகும். ஆபத்தான குகைகளில் எடுக்கப்ட்ட இந்த திரைப்படம் மிகவும் பிரபலமானது. இந்த படத்தை வைத்தே இந்த குகைக்கு குணா குகை என அழைக்கப்பட்டு வருகிறது.

25
குணா குகை பார்வையிடும் சுற்றுலா பயணிகள்
Image Credit : our own

குணா குகை பார்வையிடும் சுற்றுலா பயணிகள்

இந்த நிலையில் குணா குகையில் இளைஞர் ஒருவர் விழுந்து அவரை மீட்பது போன்ற திரைப்படமான மஞ்சு மேல் பாய்ஸ் படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து குணா குகை மேலும் பிரபலமடைந்தது. இந்த குகையை பார்ப்பதற்கு மட்டுமே பல லட்சம் பேர் குவித்து வருகிறார்கள். வானுயர்ந்த பாறைகள் இருக்கும் பாறைகளில் நடுவே உள்ள குணா குகையில் தவறி விழுந்தால் அவ்வளவுதான். 

Related Articles

Related image1
Guna : "இளையராஜாவின் அடுத்த அடி".. மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவிற்கு பறந்த நோட்டீஸ் - குணா படத்தால் வந்த வம்பு!
Related image2
வசூலில் பலத்த அடி வாங்கிய 'தக் லைஃப்'.. நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
35
13 பேர் உயிரை காவு வாங்கிய குணா குகை
Image Credit : our own

13 பேர் உயிரை காவு வாங்கிய குணா குகை

இதுவரை 13 நபர்கள் வரை இந்த குணா குகைக்கு பலியாகி இருக்கிறார்கள். தொடர் உயிர் இழப்புகள் ஏற்பட்டதால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே குணா குகை முழுவதும் வனத்துறையினர் கம்பிகளை வைத்து பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது குணா குகையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் youtube ஷார்ட்ஸ் என சமூக பிரபலத்திற்காக பலரும் குணா குகையில் இருந்து வீடியோ எடுத்து வருகிறார்கள்.

45
குணா குகைக்கு செல்ல முயன்ற இளைஞர்
Image Credit : Asianet News

குணா குகைக்கு செல்ல முயன்ற இளைஞர்

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் குணா குகைக்குள் செல்லப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த இடத்திற்கு முன் சென்ற வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பாதுகாப்பு கம்பிகளுக்கு நடுவே தன்னுடைய உடல் மெலிந்ததை வைத்து இரு கம்பிகளுக்கு நடுவே கடந்து சென்று வீடியோ எடுத்துள்ளார்.

55
100 அடி குழிக்கு முன் இளைஞர்
Image Credit : Asianet News

100 அடி குழிக்கு முன் இளைஞர்

ஒரு அடி தவறிருந்தால் கூட பல நூறு அடிகளுக்கு கிழே அந்த இளைஞர் உயிரை இழந்திருக்க நேர்ந்திருக்கும்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆபத்தை உணராமல் ரீல்ஸ் மற்றும் செல்ஃபி மோகத்திற்காக இளைஞர்கள் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.  

மேலும் தடையை மீறி உள்ளே செல்ல முயன்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  ஒரு சில இளைஞர்கள் ஆர்வகோளாறால் லைக்குக்காக உயிரை இழக்கும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கொடைக்கானல் சுற்றுலா
காவல்
இன்ஸ்டாகிராம்
குற்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved