- Home
- Tamil Nadu News
- சந்திராபுரம்.. தனது கிராமத்து பெயரை சொல்லி பதவியேற்றுக் கொண்ட வேட்டி கட்டிய தமிழன்.. டெல்லியில் நெகிழ்ச்சி
சந்திராபுரம்.. தனது கிராமத்து பெயரை சொல்லி பதவியேற்றுக் கொண்ட வேட்டி கட்டிய தமிழன்.. டெல்லியில் நெகிழ்ச்சி
குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு நிகழ்வின் போது தான் பிறந்த கிராமத்தின் பெயரை உச்சரித்து பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் என்னும் நான்
நாட்டின் 15வது குடியரசு துணைத்தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணப்பத்திரத்தை வாசிக்க அதனை ஏற்று வழிமொழிந்த சி.பி.ராதாகிருஷ்ணன், “சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் என்னும் நான்” என்று தான் பிறந்த கிராமத்தின் பெயரையும் உச்சரித்து பதவியேற்றுக்கொண்ட சம்பவம் தமிழக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Congratulations 💐
Shri 𝐂𝐏 𝐑𝐚𝐝𝐡𝐚𝐤𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐧 Ji 𝐭𝐚𝐤𝐞𝐬 𝐨𝐚𝐭𝐡 𝐚𝐬 𝐭𝐡𝐞 𝟏𝟓𝐭𝐡 𝐕𝐢𝐜𝐞 𝐏𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚 #VicePresident#India#CPRadhakrishnan Ji@VPIndiapic.twitter.com/siwys4rwyl— Dr. Bharat Pathak (@bharatpathak08) September 12, 2025
ஆர்எஸ்எஸ் முதல் குடியரசு துணைத்தலைவர் வரை
திருப்பூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திராபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர். 16 வயதில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜன சங்கத்தில் சேர்ந்து அரசியலுக்கு அடியெடுத்து வைத்த ராதாகிருஷ்ணன், 1998 மற்றும் 1999ல் கோயம்புத்தூர் தொகுதியில் இருந்து லோக்சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-2007 வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்தார்.
ஆளுநராக ராதாகிருஷ்ணன்
ஆளுநராக ராதாகிருஷ்ணன்: 2020-2023 வரை புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும், 2023-2024 வரை ஜார்கண்ட் ஆளுநராகவும், 2024 ஜூலை முதல் 2025 செப்டம்பர் வரை மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும் பொறுப்பு வகித்தார். மேலும் தெலங்கானா மாநில தற்காலிக ஆளுநராகவும் ராதாகிருஷணன் பொறுப்பு வகித்துள்ளார்.
ராதாகிருஷ்ணனின் வெற்றி
குடியரசு துணைத்தலைவராக பொறுப்பு வகித்த ஜகதீப் தன்கர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டு 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது எதிர்க்கட்சி வேட்பாளரான சுதர்சன ரெட்டி பெற்ற வாக்குகளை விட 152 வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.