சசிகலாவுக்கு ஷாக்.. அணியில் இருந்து விலகுவதாக வெண்மதி அதிரடி அறிவிப்பு
VK Sasikala | அதிமுக.வை ஒன்றிணைக்க சசிகலா எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளாத நிலையில் அவரது அணியில் இருந்து விலகுவதாக அவரது தீவிர ஆதரவாளரான வெண்மதி தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் தீவிர ஆதரவாளர் வெண்மதி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக.வில் பல அணிகள் உருவாகின. அதில் ஒரு அணியான சசிகலா செய்தியாளர்களை சந்தித்தபோது அவரது பேச்சுக்கு தனது முக பாவனைகள் மூலம் மீம்ஸ் கிரியேட்டர்கள் மத்தியில் பிரபலமானவர் வெண்மதி. சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் இவர் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகிறார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் சசிகலாவின் அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் கொள்கைகளை பின்பற்றிய சசிகலா
தனது விலகல் தொடர்பாக அவர் கூறுகையில், “புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் கொள்கைகளைப் பின்பற்றி சசிகலாவின் ஆதவாளராக பல ஆண்டுகளாக பயணித்தேன். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக அவரது அணியில் இருந்து விலகி தனித்து சமூகப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.
என் ஆதரவாளர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை..
அதிமுக.வை ஒன்றிணைப்பேன் என்று தொடர்ந்து சொல்லிவரும் சசிகலா இது தொடர்பாக எந்த பணியையும் மேற்கொள்ளாததால் அவரது அணியில் இருந்து விலகுகிறேன். ஒன்றிணைப்பதாக சொல்லி சசிகலா தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதால் என் உடன் பயணிப்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
சசிகலாவின் பேச்சை ரசித்த வெண்மதி
ஒவ்வொருவம் தங்கள் தலைவர்கள் பேச்சை ரசிப்பதைப் போல் ரசித்தே சசிகலா பேச்சுக்கு தலையசைத்தேன். அதை வைத்து மீம் போட்டார்கள். அது ஒ பக்கம் என்னைப் பிரபலப்படுத்தியது. மற்றொரு பக்கம் வலியைக் கொடுத்தது. சசிகலா உட்பட அனைவரையும் பாஜக தான் இயக்குகிறது என்பதே உண்மை” என் தெரிவித்துள்ளார்.