- Home
- Tamil Nadu News
- அப்பாடா... வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்கப்போகுது.? சென்னை மக்களுக்கு குஷியா செய்தி
அப்பாடா... வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்கப்போகுது.? சென்னை மக்களுக்கு குஷியா செய்தி
சென்னையில் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் இணைப்புத் திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பரில் தொடங்க உள்ளது. இந்த 5 கி.மீ வழித்தடத்தில் 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, சிக்னல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மின்சார ரயில் சேவை, பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை ஆகியவை உள்ளது.
இதன் காரணமாக அலுவலகம் செல்பவர்கள் மெட்ரோ ரயில் சேவையை பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் அலுவலகத்திற்கும் செல்ல முடிகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான பரங்கிமலை- வேளச்சேரி பறக்கும் ரயில் இணைப்பு திட்டம்.
பறக்கும் ரயில் திட்டம்
சுமார் 15 ஆண்டுகாலமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் உள்ளது. இதனால் சென்னை கடற்கரை- பரங்கிமலை வரை பயணிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை பாலம் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. வேளச்சேரி - பரங்கிமலை இடையே 5 கி.மீ தூரத்தில் 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வழித்தடத்தில் சிக்னல் அமைப்புப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வேளச்சேரி பரங்கிமலை இடையில் பறக்கும் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேளச்சேரி- பங்கிமலை பறக்கும் ரயில்
இந்த செய்தி சென்னை மக்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில் தென் சென்னை பகுதியை எளிதில் அணுகக்கூடிய வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளனன.
அடுத்தாக சென்னை வேளச்சேரி கடற்கரை இடையேயான எம்ஆர்டிஎஸ் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்க கொள்கை அளவில் ரயில்வே ஒப்புதல் அளித்திருந்தது .
மெட்ரோ ரயில் சேவை
நிதி மற்றும் அதிகார மாறுதல்கள் தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்னும் இரண்டு மாதங்களில் இரு துறைகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. எம்ஆர்டிஎஸ் வழித்தடத்தை மெட்ரோ ரயில் கட்டமைப்புகளுக்கு நிகராக மேம்படுத்த சிஎம்ஆர்ஐ நிர்வாகம் திட்டறிக்கை தயாரிக்க உள்ளது .
2028 முதல் சென்னையின் பறக்கும் ரயில் சேவை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கும் வகையில் உட்கட்டமைப்புகள் பலப்படுத்தவும் , தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.