மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

School Holiday
தமிழகத்தில் விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் சொல்ல முடியாத அளவுக்கு குஷிதான். இந்நிலையில் தமிழகத்தில் பொது விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் அல்லாமல் சில முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள், கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Vedaranyam Vedaranyeswarar Temple
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் சிவபெருமான் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சிக் கொடுத்த ஸ்தலமாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற இடமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
TN School Holiday
இந்நிலையில், தேரோட்டத்தை முன்னிட்டு வேதாரண்யம் தாலுகாவில் உள்ள நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
School leave
இதுதொடர்பாக நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்ட அறிவிப்பில்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிக்குத் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வரும் நாளை நடைபெற உள்ளது. அன்றைய தினம் வேதாரண்யம் தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், விடுமுறை என்றாலும், அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.