வைகை எக்ஸ்பிரஸ், குருவாயூர் ரயில் சேவைகளில் மாற்றம்! பயணிகளுக்கு முக்கிய அலர்ட்!
Vaigai and Guruvayur Express Train Timings Changed: தண்டவாள மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக வைகை, குருவாயூர் உள்ளிட்ட சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொரர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக ரயில் சேவையில் மாற்றம்
தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில்வே கோட்டங்களில் தண்டவாள மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நடப்பு ஜூன் 2026 மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் மற்றும் மெமு ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நேர பராமரிப்புப் பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் காரணமாக சில முக்கிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர் – மதுரை வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12635) ரயில் ஜூன் 6ம் தேதி (நாளை) அன்று வழக்கமான நேரத்தை விட 1 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வகை எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து தினமும் மதியம் 1.15 மணிக்கு மதுரைக்கு புறப்படும் நிலையில், இதில் 1 மணி நேரம் தாமதம் ஏற்படும்.
காட்பாடி – திருப்பதி மெமு ரயில்
காட்பாடி – திருப்பதி பயணிகள் மெமு (வ.எண்: 67210) ஜூன் 23ம் தேதி அன்று வழக்கமான நேரத்தில் இருந்து 35 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.
திருச்சிராப்பள்ளி – பகத் கி கோதி எக்ஸ்பிரஸ்
திருச்சிராப்பள்ளி – பகத் கி கோதி எக்ஸ்பிரஸ் (வ.எண்: 20482) ஜூன் 6ம் தேதி செல்லும் வழியில் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாகும்.
ஹவுரா – சென்னை சென்ட்ரல் மெயில்
ஹவுரா – சென்னை சென்ட்ரல் மெயில் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 12839) ஜூன் 6, 9, 13, 16, 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் 50 நிமிடங்களும், ஜூன் 23 அன்று மட்டும் 55 நிமிடங்களும் தாமதமாக இயக்கப்படும்.
ஷாலிமார் – திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ஷாலிமார் – திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 22642) ஜூன் 9, 16 மற்றும் 23ம் தேதிகளில் 55 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
பாட்னா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்
பாட்னா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 22644) ஜூன் 4, 11 மற்றும் 18ஆம் தேதிகளில் 55 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
தென்மாவட்ட ரயில் சேவையிலும் மாற்றம்
இதே போல் மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ரயில்கள் ஏற்கனவே மதுரை, விருதுநகர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட சில தேதிகளில் கீழ்க்கண்டவாறு தாமதமாக இயங்கும்.
குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ்
குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16128) ஜூன் 17ஆம் தேதி அன்று சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். ஜூன் 10 மற்றும் 24 ஆகிய தேதிகளில் செல்லும் வழியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாகும். ஜூன் 6ம், 7, மற்றும் 11 முதல் 14 வரை, ஜூன் 18 முதல் 21 வரை ஆகிய தேதிகளில் செல்லும் வழியில் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ்
நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16352) ஜூன் 7, 11, 14, 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் செல்லும் வழியில் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.
தூத்துக்குடி – கச்சிகுடா எக்ஸ்பிரஸ்
தூத்துக்குடி – கச்சிகுடா எக்ஸ்பிரஸ் (வ.எண்: 17616) ஜூன் 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் செல்லும் வழியில் சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

