- Home
- Tamil Nadu News
- 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான குஷியான நியூஸ்.! பொதுத்தேர்வுக்கு இனி பயப்படவே தேவையில்லை
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான குஷியான நியூஸ்.! பொதுத்தேர்வுக்கு இனி பயப்படவே தேவையில்லை
2026 முதல் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருடம் இருமுறை நடத்த மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், தேர்வுக்கு தயாராக வாய்ப்பளிக்கவும் திட்டம்.

school examஇனி வருடத்திற்கு 2 முறை பொதுத்தேர்வு.! 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முக்கிய தேர்வாக உள்ளது. அந்த தேர்வு தான் மாணவர்களின் எதிர்கால கல்விக்கு முக்கிய அடித்தளமாக அமையவுள்ளது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயத்தோடே தேர்வை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டில் இருந்து வருடத்துக்கு இரண்டு முறை சிபிஎஸ்இ தேர்வு நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முறை பொதுத்தேர்வு
மத்திய கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இ இணைந்து சேர்ந்து ஒரு புது திட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 2026ஆம் ஆண்டில் இருந்து 10, 12வது போர்டு எக்ஸாம் வருடத்துக்கு இரண்டு முறை நடத்தலாம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முடிவோட முக்கியமான நோக்கத்தை பொறுத்தவரை மாணவர்களுக்கு தேர்வு தொடர்பாக டென்ஷன குறைக்கவும், தேர்வுக்கு சிறப்பான முறையில் தயாராகுறதுக்கு சான்ஸ் கொடுக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருடத்திற்கு இரண்டு பொதுத்தேர்வு
தற்போதை நிலையில் சிபிஎஸ்இ போர்டு எக்ஸாம் பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடைபெறும். புது திட்டத்தின்படி-முதல் எக்ஸாம் ஜனவரி-பிப்ரவரில நடக்கலாம். இண்டாவது எக்ஸாம் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜூன் மாதம் சப்ளிமென்ட்ரி/இம்ப்ரூவ்மென்ட் தேர்வு நடக்கலாம் என கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு என்ன லாபம்?
மாணவர்கள் மன அழுத்தம் குறையும், ஒரே தேர்வை நம்பி இருக்கறதுக்கு பதிலா, மாணவர்களுக்கு இரண்டு முறை சான்ஸ் கிடைக்கும். முதல் தேர்வில் நல்ல மார்க் கிடைக்கவில்லையென்றால் இரண்டாவது எக்ஸாம்ல இம்ப்ரூவ் பண்ணிக்கலாம். மேலும் மாணவர்களுக்கு தேர்வில் தோல்வி அடைவோம் என்ற பயம் இல்லாத நிலை உருவாகும், சப்ளிமென்ட்ரி தேர்வோடு போர்டு எக்ஸாம் எழுத கூடுதல் சான்ஸ் இருக்கும்.
வெளிநாடுகளுக்கு இணையாக சிபிஎஸ்இ-யோட புது குளோபல் பாடதிட்டம்
மற்றொரு முக்கிய முடிவாக கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இ-ய வெளிநாட்டு ஸ்கூல்களுக்கு "சிபிஎஸ்இ குளோபல் கரிக்குலம்" ஆரம்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாட திட்டம் 2026-27 கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும். இதனால் இந்திய கல்வி முறை இன்டர்நேஷனல் தரத்திற்கு உயரும் என கூறப்படுகிறது.
சிபிஎஸ்இ இந்த முடிவு எடுத்ததுக்கு என்ன காரணம்?
மாணவர்கள் மேல உள்ள அழுத்தத்தை குறைந்த மத்திய அரசு இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. வெளிநாடுகளில் சிபிஎஸ்இ ஸ்கூல் அதிகமா உள்ள நிலையில் அவங்களுக்கும் ஒரு நல்ல, தரமான பாடத்திட்டம் கொடுக்க வேண்டியது நிலை உள்ளது.
எனவே இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், இந்த திட்டத்தை விரைவில் மக்களோட கருத்துக்காக முன் வைப்போம், இதற்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.