- Home
- Tamil Nadu News
- பழனிசாமி கொஞ்சம் கவனமாக இருங்க.. உங்களையே நீங்க கட்சி விட்டு நீக்கிட போறீங்க.. உதயநிதி செம கலாய்
பழனிசாமி கொஞ்சம் கவனமாக இருங்க.. உங்களையே நீங்க கட்சி விட்டு நீக்கிட போறீங்க.. உதயநிதி செம கலாய்
துரோகத்திற்கான நோபல் பரிசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். கூடவே அவருக்கு அடிமைத்தனத்திற்கான நோபல் பரிசையும் சேர்த்து வழங்க வேண்டும் என துணைமுதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனை நீக்கிய எடப்பாடி
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய உதயநிதி, “எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அண்மை காலமாக அதிமுக.வில் இருந்து பலரையும் வரிசையாக நீக்கி வருகிறார். அந்த வகையில் கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை அண்மையில் கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்.
அடிமைத்தனத்திற்கான நோபல் பரிசு
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்திலேயே செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தவர். சுமார் 53 ஆண்டு காலம் அதிமுக.வில் பயணித்த செங்கோட்டையன் தற்போது எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று குறிப்பிடுகிறார். மேலும் துரோகத்திற்காக பழனிசாமிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என சொல்கிறார். துரோகத்திற்காக மட்டும் அல்ல, அடிமைத்தனத்திற்காகவும் பழனிசாமிக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்.
உங்களையே நீங்க நீக்க போறீங்க..
திமுக.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கப்போவதாக பழனிசாமி சொன்னார். ஆனால் அதிமுக.வினரே தற்போது அவருக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளனர். பழனிசாமி சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வரிசையாக அதிமுகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கி வரும் பழனிசாமி ஒருநாள் அவரையே அவர் கட்சியில் இருந்து நீக்கப்போகிறார்” என்று விமர்சித்துள்ளார்.