MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் விஜய்யின் 'வெற்றி' டிவி.. இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி!

சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் விஜய்யின் 'வெற்றி' டிவி.. இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி!

Vetri TV: ஆளும்கட்சியான தவெக சார்பில் வெற்றி டிவி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டிவி தொடர்பாக இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 16 2026, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய் தவெகவின் 'வெற்றி' டிவி
Image Credit : AI

விஜய் தவெகவின் 'வெற்றி' டிவி

2026 சட்டப்பேரவை தேர்தல் தமிழக அரசியல் களத்தையே புரட்டிப் போட்டு விட்டது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தது. 108 இடங்களில் தவெக வென்ற நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் விஜய் முதல்வராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தவெக தலைவரும், முதல்வருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும் செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க 'வெற்றி நியூஸ்' (Vetri News) என்ற பெயரில் புதிய சாட்டிலைட் செய்தி சேனல் ஒன்றைத் தொடங்க இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.

அதாவது ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சேனலின் லோகோ வெளியாகலாம் என்றும், ஜூன் 30-க்குள் இதர ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்படலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாகப் பரவி வருகிறது. அத்துடன் 'வெற்றி' என்ற பெயரிலான ஒரு லோகோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வைரல் லோகோவின் உண்மை பின்னணி என்ன?
Image Credit : X

வைரல் லோகோவின் உண்மை பின்னணி என்ன?

தற்போது இணையத்தில் உலா வரும் அந்த லோகோ, கட்சியின் அதிகாரப்பூர்வ லோகோ அல்ல. அது தவெக ரசிகர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மாதிரி லோகோ (Fan-made Concept Logo) ஆகும். மேலும், இந்த டிவியின் லான்ச் தேதிகள் குறித்தோ அல்லது லோகோ குறித்தோ தமிழக வெற்றிக் கழகத் தலைமை இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
Sun TV : வார வாரம் விஜய் படம் போட்டு TRP ஏத்தும் சன் டிவி... இந்த வாரம் என்ன படம் தெரியுமா?
Related image2
MGR முதல் விஜய் வரை... கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கும் தமிழ்நாட்டு முதல்வர்களுக்கும் என்ன தொடர்பு?
34
ஈக்காட்டுத்தாங்கலில் தயாராகும் ஸ்டுடியோ?
Image Credit : Asianet News

ஈக்காட்டுத்தாங்கலில் தயாராகும் ஸ்டுடியோ?

இருப்பினும், முன்பு தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த 'எஸ் எஸ் மியூசிக்' (SS Music) சேனலின் லைசென்ஸை தவெக தரப்பினர் வாங்கியுள்ளதாகவும், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் புதிய சேனலுக்கான அதிநவீன ஸ்டுடியோ மற்றும் தொழில்நுட்ப அலுவலகப் பணிகள் ரகசியமாக நடந்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த புதிய மீடியா நிறுவனத்திற்கான ஆட்கள் சேர்ப்பு (Hiring) விளம்பரங்களும் டிஜிட்டல் தளங்களில் பரவி வருகின்றன.

44
சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் வெற்றி டிவி
Image Credit : X

சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் வெற்றி டிவி

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகள் தங்களுக்கெனச் சொந்தமாகத் தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வரும் நிலையில், தவெக-வின் இந்த புதிய முயற்சி அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே இதன் முழுமையான வடிவம் தெரியவரும். இணையத்தில் உலா வரும் தகவல் உண்மையாகி வெற்றி டிவி லான்ச் ஆனால் அது சன் டிவி குழும சேனல்கள் மற்றும் இதர நியூஸ் சேனல்களின் டிஆர்பியை பாதிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. விஜய்க்கும், தவெகவுக்கும் இளைய தலைமுறையினர் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் அதிக ஆதரவு நிலவி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சன் தொலைக்காட்சி
டிவி.கே. விஜய்
செய்திகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
School: பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? மொத்தம் 155 நாட்கள் லீவு!
Recommended image2
Govt Scheme: பெண்களுக்கு ஜாக்பாட்..! E-Bike வாங்க ரூ.1 லட்சம் மானியம்..! எங்கு, எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?!
Recommended image3
EPS vs Stalin: எடப்பாடிக்கு செக் மேட்.! எஸ்.பி.வேலுமணிக்கு ஆஃபர்களை அள்ளி வீசி ரகசிய டீல் போட்ட ஸ்டாலின்.! மொத்தமாக சரியும் கொங்கு கோட்டை?!
Related Stories
Recommended image1
Sun TV : வார வாரம் விஜய் படம் போட்டு TRP ஏத்தும் சன் டிவி... இந்த வாரம் என்ன படம் தெரியுமா?
Recommended image2
MGR முதல் விஜய் வரை... கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கும் தமிழ்நாட்டு முதல்வர்களுக்கும் என்ன தொடர்பு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved