- Home
- Tamil Nadu News
- செத்தாலும் பிஜேபியோடு சேர மாட்டார் விஜய்..! சோசியல் மீடியாவை தெறிக்க விடும் அவரது ரசிகர்கள்
செத்தாலும் பிஜேபியோடு சேர மாட்டார் விஜய்..! சோசியல் மீடியாவை தெறிக்க விடும் அவரது ரசிகர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக முயன்றது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு அதிமுக மற்றும் பாஜக ஆதரவு தெரிவித்தாலும், பாஜகவுடன் கூட்டணி வைக்க விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீயாக வேலை பார்த்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சி தலைவர்கள் ரோட் ஷோ, பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பலம் வாய்ந்த கூட்டணியை கொண்ட திமுகவை வீழ்த்த அதற்கு இணையாக கூட்டணியை அமைக்க அதிமுக முடிவு செய்தது.
இதற்காக திரைத்துறையில் இருந்து அரசியல் களத்தில் குதித்த விஜய்யை தங்களது கூட்டணியில் இணைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விஜய் தரப்போ ஆட்சியில் பங்கு, 50 சதவிகித தொகுதி ஒதுக்கீடு என நிபந்தனைகளை விதித்தார். இதனால் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் மீண்டும் பாஜகவை தனது கூட்டணியில் இணைந்தது அதிமுக,
இந்த நிலையில் கரூரில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தவெக கடும் நெருக்கடியை சந்தித்த நிலையில், விஜய்க்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் பாஜக எம்பிக்கள் குழு வரை களத்தில் இறங்கியது.
விஜய்க்கு ஆதராக என்டிஏ வின் உண்மை கண்டறியும் குழுவும் அறிக்கை வெளியிட்டது. எப்படியாவது விஜய்யை தங்களது கூட்டணியில் இணைக்க காய் நகர்த்தியது. இதற்கு ஏற்றார் போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டுள்ள பிரச்சார கூட்டத்திலும் தவெகவின் கொடிகளோடு அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டர்.
இதனை பார்த்து உற்சாகமாக பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில் பாஜகவுடன் செத்தாலும் விஜய் கூட்டணி வைக்கமாட்டார் என தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் உறுதி பட தெரிவித்து வருகிறார்கள்.
ஒருவேளை பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக அங்கிருந்து விலகி வெளியே வரும் பட்சத்தில் திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக தவெக ஆதரவாளர் போக்கிரி விக்டர் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், செத்தாலும் பிஜேபியோடு சேர மாட்டார் விஜய் என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கரூர் சம்பவத்தில் பாஜக ஆதரவு கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளட்டும், கூட்டணி பத்தி பேசாதே என பதிவிட்டுள்ளார். இதே போல மற்றொரு தவெக ஆதரவாளரான யூடியூப்பர் பீலிக்ஸ் ஜெரால்டு கூறுகையில், தற்போது திமுக- காங்கிரஸ் கூட்டணி உள்ளது. இதில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி வைக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என கூறி வருகிறார். எனவே பாஜகவுடன் தவெக கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லையென விஜய் ஆதரவாளர்கள் உறுதி பட தெரிவிக்கிறார்கள். அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை. கடைசி நேரத்தில் எந்த மாற்றத்தையும் சந்திக்கும். எனவே தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளதால் காலம் தான் இதற்கு விடை கொடுக்கும்.