- Home
- Tamil Nadu News
- விஜய் வர வரைக்கும் மக்கள் வெயில்ல இருந்து சாகனுமா.? வேற ஆப்ஷன் இல்ல.. வசமாக சிக்கிய தவெக வழக்கறிஞர்
விஜய் வர வரைக்கும் மக்கள் வெயில்ல இருந்து சாகனுமா.? வேற ஆப்ஷன் இல்ல.. வசமாக சிக்கிய தவெக வழக்கறிஞர்
தவெக ஆதரவு வழக்கறிஞர் ஒருவர், தலைவர்கள் தாமதமாக வருவது அரசியல் கலாச்சாரம் என்றும், வெயிலில் மக்கள் காத்திருப்பதற்கு வேறு வழியில்லை என்றும் கூறியது சர்ச்சையாகியுள்ளது.

தவெக வழக்கறிஞர் பேட்டி
தவெக ஆதரவாகப் பேசும் வழக்கறிஞர் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தவெக ஆதரவாகப் பேசும் வழக்கறிஞர், “ஒருவேளை கூட்டம் முழுவதுமா வந்திருந்தால் தலைவர்கள் உடனே வருவாங்க. இல்லை 10 மணிக்குக்குள்ள கூட்டம் இல்லை என்றால், இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று அவர்கள் கேட்டுவிட்டு வருவார்கள்” என்று கூறினார்.
வழக்கறிஞர் கருத்து
“அதுவரைக்கும் வெயில்ல இருக்குறவங்க சாகணும்” என்று நெறியாளர் கேட்க, அதற்கு பதிலளித்த தவெக வழக்கறிஞர், “வேர ஆப்ஷன் இல்ல. இதுதான் அரசியல் கலாச்சாரம்” என்று பதில் சொன்னார். இதற்கு நெட்டிசன்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
வைரல் வீடியோ
இதுதொடர்பாக ஒருவர் தெரிவித்துள்ள கருத்தில், “ஒரு வழக்கறிஞர் என்னடா இந்த 41 பிணங்களும் எங்க கூட்டத்துக்கு வந்து தான் செத்தாங்கன்னு என்ன ஆதாரம் என்று கேட்கிறார். இன்னொரு வழக்கறிஞர் என்னன்னா வேற வழி இல்ல அதுதான் கலாச்சாரம் இப்படித்தான் சாவார்கள் என்று அப்பட்டமா பேசுறாரு” என்று தெரிவித்துள்ளார். தவெகவுக்கு ஆதரவாகப் பேசும் வழக்கறிஞரின் பேச்சு பெரும் சர்ச்சையை சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.