- Home
- Tamil Nadu News
- தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் செய்த செயல்! தவெகவினர் அதிர்ச்சி! நடந்தது என்ன?
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் செய்த செயல்! தவெகவினர் அதிர்ச்சி! நடந்தது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் தொடங்கியது. நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

Tamilaga Vettri Kazhagam Anniversary
நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலை மையமாக கொண்டு கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2, 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
tvk vijay
சுமார் 9.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கின் வளாகத்திற்குள் ரசிகர்கள் ஆரவாரங்கள் மத்தியில் நுழைந்தார். பின்னர் விழாவானது சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. மேடை ஏறிய விஜய்க்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விஜய்யுடன் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் ஆகியோரும் மேடை ஏறினர். மேடையில் விஜய்யை கண்ட தொண்டர்கள் 'டிவிகே டிவிகே' என்று கட்சியின் பெயரை உச்சரித்தனர்.
Prashant Kishor
புதிய கல்விக் கொள்கை, மும்மொழி திணிப்புடன் சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்ப்போம் என்ற வாசகங்களுடன் கூடிய #GetOut என்ற கையெழுத்து இயக்கத்தினை தவெக தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். அதில் தவெகவினர் அனைவரும் கையெழுத்திட்ட நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திடாமல் புறக்கணித்தார்.
#GetOut பதாகையில் கையெழுத்து போட மறுத்த ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் ! | TVK
Vijay
மேலும் விழாவின் முதல் நிகழ்வாக, நாட்டுப்புறப் பாடகி கிடாக்குழி மாரியம்மாள் கலை நிகழ்ச்சி நடந்தது. பிறகு விஜய்யின் ஓராண்டு அரசியலை விளக்கும் வகையிலான ஆவணப்படம் வெளியிடப்பட்டது.