தமிழகமே மெச்சிய மாநாடு; ஆனா உழைத்தவர்களுக்கு சிறு பாராட்டு கூட இல்லை - விஜய் கோட்டைவிட்டது எங்கே?
TVK Maanadu : தளபதி விஜய் தன்னுடைய அரசியல் மாநாட்டில், நன்றி கூற வேண்டிய பலருக்கு முறையான வகையில் நன்றி கூறவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Bussy Anand
விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. உண்மையில் ஒரு புதிய அரசியல் தலைவராகவே, பலர் கண்களுக்கு தென்பட்டார் தளபதி விஜய் என்றால் அது மிகையல்ல. காரணம் வழக்கம் போல உள்ள ஒரு அரசியல் கட்சி மாநாட்டை போல அல்லாமல், மிகவும் எதார்த்தமான முறையில் பல விஷயங்களை தளபதி விஜய் தன்னுடைய உரையில் முன் வைத்தார்.
"எடுத்து சொன்னா அவர் மாறிவிடுவார்" த.வெ.க தலைவர் விஜயின் ஸ்பீச் - தமிழிசை கொடுத்த ரியாக்ஷன்!
vijay political meet
எந்த ஒரு விஷயத்தையும் நேர்பட பேசுபவன் நான், என்பதை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய கட்சி கொள்கைகளையும், தன்னுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் நடக்கப் போகும் விஷயங்களையும் மிக தெளிவாக இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கு முன்னால் அழகாக எடுத்துரைத்தார் அவர். குறிப்பாக மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் இரண்டும், மக்கள் விரோத செயலில் ஈடுபடுவதாகவும், அவர்களை எதிர்த்து தான் போரிட உள்ளதாக சர்ச்சை மிகுந்த கருத்துக்களையும் அவர் வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொள்ளும், குடும்ப அரசியல் செய்யும் நபர்களை எதிர்த்து தான் நான் அரசியலில் களம் இறங்கி இருக்கிறேன் என்று நேரடியாக ஆளும் திராவிட முன்னேற்ற கட்சியின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார் தளபதி விஜய்.
TVK Leader Vijay
அது மட்டுமல்லாமல், தன்னுடைய பேச்சின் முடிவில் "என்னடா இது, விஜய் யாருடைய பெயரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடாமல், பொதுவாக பேசுகிறார் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். இது பயத்தினால் பேசாமல் இருப்பது அல்ல, தமிழக வெற்றிக்கழகத்தை பொறுத்தவரை, வெறுப்பு அரசியல் என்பது எப்போதும் கூடாது என்று நினைக்கிறேன். அதனால் தான் அவர்களுடைய பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை" என்று பேசி இருந்தார். உண்மையில் ஒரு புதிய கட்சி இவ்வளவு நேர்த்தியாக லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் ஏற்பாடுகளையும் செய்து, பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த TVK மாநாட்டை மிக அழகாக அந்த கட்சியினர் நடத்தி முடித்துள்ளனர்.
Vikravandi
குறிப்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், கடந்த ஒரு மாத காலமாகவே மாநாட்டு நிகழ்வு நடக்கும் இடத்திற்கு பலமுறை சென்று, ஓய்வு உறக்கமின்றி பல விஷயங்களை கவனித்தார். ஆனால் மேடையில் பல விஷயங்களைப் பேசிய தளபதி விஜய், இறுதியில் தனது தொண்டர்களை பத்திரமாக தங்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்று எந்த விதமான கோரிக்கையும் விடுக்கவில்லை.
இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு மாநாட்டை தயார் செய்த தன்னுடைய கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட யாருக்குமே தன்னுடைய நன்றிகளை தெரிவிக்கவில்லை. இதுவே மற்ற கட்சிகள் மாநாடு நடத்தியிருந்தால், நிச்சயம் இந்த நேரத்தில் இந்த மாநாடு நடக்க உதவி அனைவருக்கும் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து இருப்பார்கள். அந்த ஒரு விஷயத்தில் விஜய் ஒரு அரசியல் தலைவராக கோட்டை விட்டுவிட்டதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.