MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேர்தல் களத்தில் அதிரடி காட்டும் விஜய்..! 234 தொகுதிகளிலும் விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு

தேர்தல் களத்தில் அதிரடி காட்டும் விஜய்..! 234 தொகுதிகளிலும் விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு

தமிழகவெற்றி கழகம் சார்பில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் 234 தொகுதிகளிலும் தங்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 03 2026, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அதிகாரம் முக்கியம்..
Image Credit : Asianet News

தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அதிகாரம் முக்கியம்..

தமிழக வெற்றி கழகத்தின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

23
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு அளிக்க அழைப்பு
Image Credit : Youtube/Tamilaga Vettri Kazhagam

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு அளிக்க அழைப்பு

அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 வெள்ளிக்கிழமை முதல் 14.02.2026 சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.

Related Articles

Related image1
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய், ஒரு விஜி ஓட்டு போடுவாங்க‌.. ஏன்டா இவன கூப்பிட்டோம்னு வருத்தப்படுவீங்க.. விஜய் மாஸ் பேச்சு!
Related image2
அநீதி, அராஜகம், தில்லுமுல்லு.. திமுகவுக்காக அப்டேட்டட் திருக்குறளை உருவாக்கிய விஜய்..
33
விருப்பமனு பெறும் நாட்கள்
Image Credit : X

விருப்பமனு பெறும் நாட்கள்

பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, தெரிவித்துக்கொள்கிறேன்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image2
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Related Stories
Recommended image1
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய், ஒரு விஜி ஓட்டு போடுவாங்க‌.. ஏன்டா இவன கூப்பிட்டோம்னு வருத்தப்படுவீங்க.. விஜய் மாஸ் பேச்சு!
Recommended image2
அநீதி, அராஜகம், தில்லுமுல்லு.. திமுகவுக்காக அப்டேட்டட் திருக்குறளை உருவாக்கிய விஜய்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved