5 நாட்களில் 108 அம்மன் கோயில் சுற்றுலா.! இவ்வளவுதான் கட்டணமா.! அசத்தும் TTDC
தமிழ்நாடு சுற்றுலாத் துறை 5 நாட்களில் 108 அம்மன் கோயில்களை தரிசிக்கும் புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. சென்னை, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர், மதுரை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கோயில்கள் இதில் அடங்கும்.

தமிழகத்தில் சுற்றுலா
எலக்ட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு சுற்றுலா மட்டுமே இளைப்பாறும் பூச்சோலையாக உள்ளது. அந்த வகையில் ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலே பக்கத்தில் இருக்கு ஊர்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கிவிடுவார்கள். இதுவே தொடர் விடுமறை என்றால் கேட்கவா வேண்டும். உல்லாச பயணத்திற்கு தயாராகி விடுவார்கள்.
அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஈர்க்கும் வகையில் மேம்படுத்தி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், கொல்லி மலை, மாமல்லபுரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா
இதில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க குளுமையான மலைப்பகுதிகளுக்கு மக்கள் தேடி செல்கிறார்கள். அடுத்ததாக குற்றால சீசன் தொடங்கியுள்ளதால் அருவிகளில் குளித்து ஆட்டம் போட படையெடுத்து வருகிறார்கள். அதிலும் ஒரு சில மக்கள் ஆன்மிக பயணமாக செல்ல தொடங்குவார்கள்.
தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா என்றால் கேட்கவா வேண்டும். இந்தியாவிலேயே அதிக கோயில்களை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே கோயில்களுக்கு செல்ல என பல வகையான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.
ஆன்மிக சுற்றுலா திட்டங்கள்
அந்த வகையில் சென்னையிலிருந்து 3 நாட்கள் பயணமாக நவக்கிரக கோயில்களுக்கு அழைத்து செல்லப்படுகிறது.இதில் திங்களூர் (சந்திரன்), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோயில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழப்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி), ஆலங்குடி (குரு) ஆகிய கோயில்களை கொண்ட சுற்றுலாவாக அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்தாக ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலை மையமாகக் கொண்ட மூன்று நாட்கள் பயண சுற்றுலாவும் செயல்படுத்தப்படுகிறது. ஆடி அமாவாசை சமயத்தில் பக்தர்களுக்காக இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. முருகனின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றை தரிசிக்கும் பயண சுற்றுலாவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது
5 நாட்களில் 108 அம்மன் கோயில் சுற்றுலா
இந்த நிலையில் 5 நாட்களில் தமிழகத்தில் உள்ள 108 அம்மன் கோயிலை தரிசிக்கும் வகையில் சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை தொடங்கவுள்ளது. முதல் நாள் இரவு சென்னையில் இருந்து புறப்படும் அந்த சுற்றுலாவானது சென்னை, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களை சுற்றி பார்த்த பிறகு இரவு முதல் நாள் திருக்கடையூரில் உள்ள ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்படும்.
அடுத்ததாக திருக்கடையூலிருந்து புறப்படும் இந்த சுற்றுலாவானது மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் வழியாக பல கோவில்களை தரிசனம் செய்த பிறகு அன்றைய தினம் இரண்டாவது நாள் தஞ்சாவூரில் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு பிறகு வது நாள் மதுரையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
அம்மன் கோயில் சுற்றுலா
அடுத்ததாக மதுரை, திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களை தரிசனம் செய்த பிறகு அன்றைய தினம் இரவு சென்னையை வந்து சேரும் வகையில் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா திட்டத்தில் 108 கோயில்களில் தரிசனம் செய்ய வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு 11 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவு இணையதளம்: www.tamilnadutourism.tn.gov.in மற்றும் www.ttdconline.com தொடர்பு: TTDC சென்னை தலைமை அலுவலகம் அல்லது உள்ளூர் அலுவலகங்களில் முன்பதிவு செய்யலாம்.