- Home
- Tamil Nadu News
- ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா.! இவ்வளவு தான் கட்டணமா.? பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சுற்றுலாத்துறை
ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா.! இவ்வளவு தான் கட்டணமா.? பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சுற்றுலாத்துறை
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலாத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 3 முதல் 14 நாட்கள் வரை நீளும் இந்தத் தொகுப்புகள்,ஒரு நாள் சுற்றுலா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் குவிந்து கிடக்கும் சுற்றுலா தளங்கள்
தமிழகத்தில் பல சுற்றுலா தளங்கள் கொட்டிக்கிடக்கிறது. அதிலும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல ஆயிரம் கோயில்கள் தமிழகத்தில் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாட்டில் பல்வேறு சுற்றுலா தொகுப்புகளை வழங்கி வருகிறது, இந்த சுற்றுலா திட்டங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவாறு புதுப்புது வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கோயில்கள், மலைவாசஸ்தலங்கள், கடற்கரைகள், மற்றும் பிற இயற்கை மற்றும் பண்பாட்டு ஆகிய இடங்களை கொண்ட சுற்றுலாக்களையும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் 3 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான பல்வேறு சுற்றுலா திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 8 நாள் தமிழ்நாடு சுற்றுலா திட்டத்தில் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, கோவை, ஊட்டி போன்ற முக்கிய இடங்களை சுற்றிபார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 நாள் கிழக்கு மேற்கு சுற்றுலா திட்டத்தில் கடற்கரைகள் மற்றும் மலைவாசஸ்தலங்களை இணைக்கும் பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையின் ஆன்மிக சுற்றுலா
5 நாட்களில் தமிழகத்தில் உள்ள முக்கியமான 108 அம்மன் சுற்றுலா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 4 நாள் அறுபடை வீடு சுற்றுலாவில் முருகன் கோயில்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லப்பட்டு வருகிறது.
3 நாள் நவகிரக சுற்றுலாவில் கும்பகோணம் பகுதியில் உள்ள நவகிரக கோயில்களுக்கும், 3 நாள் பஞ்சபூத தலங்கள் சுற்றுலாவிற்கு திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிதம்பரம், திருவானைக்காவல், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்கும், 14 நாள் சூரிய கடவுள் சுற்றுலாவிற்கு சூரிய கோயில்களை மையமாகக் கொண்ட ஆன்மீக பயணமாவுக் சுற்றுலாத்துறை வடிவமைத்துள்ளது. இந்த சுற்றுலா திட்டத்தை தமிழகம் மட்டுமல்ல பல மாநில மக்களும் ஆர்வத்தோடு பங்கேற்று வருகிறார்கள்.
சாகச மற்றும் இயற்கை சுற்றுலா
ஆன்மிக சுற்றுலா மட்டுமில்லாமல் இயற்கை சார்ந்த சாகச சுற்றுலா தொகுப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 13 வகையான சாகச சுற்றுலா தலங்கள் அழைத்து செல்லப்படுகிறது. இதில் மலை ஏறுதல், நீர்வீழ்ச்சி பயணங்கள், மற்றும் காட்டுயிர் சுற்றுலா ஆகியவை இடம்பெற்றுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு: மலைவாசஸ்தலங்களுக்கான சுற்றுலா தொகுப்புகள், அந்த அந்த பகுதிகளில் உள்ள பிரபலமான இடங்களுக்கும் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.
கன்னியாகுமாரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், குமரியம்மன் கோயில், மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய இடங்களுக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் மற்றும் புனித தீர்த்தங்களுக்கும் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.
ஒரு நாள் சுற்றுலா திட்டங்கள்
மேலும் ஒரு நாள் சுற்றுலா திட்டமும் தமிழக சுற்றுலாத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து திருப்பதி கோயிலுக்கு சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மற்றும் கிரிவல சுற்றுலா, சுவாதி பெருமாள் சுற்றுலாவானது ஆன்மீக இடங்களை மையமாகக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியின் கடற்கரை, ஆரோவில், மற்றும் பிரெஞ்சு காலனித்துவ இடங்களுக்கும் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தின் வரலாற்று கோயில்கள் மற்றும் திவ்ய தேசங்கள் ஆகிய இடங்களுக்கும் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.
அம்மன் கோயிலுக்கு சுற்றுலா திட்டங்கள்
இந்த நிலையில் தமிழக அரசு ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா திட்டத்திற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயில் (பாரிமுனை), அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் (ராயபுரம்), வடிவுடைய அம்மன் கோயில் (திருவொற்றியூர், பவானி அம்மன் கோயில் (பெரியபாளையம்), அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் (புட்லூர்), திருவுடையம்மன் கோயில் (திருமுல்லைவாயில்), பச்சையம்மன் கோயில் (திருமுல்லைவாயில்)
பாலியம்மன் கோயில் (வில்லிவாக்கம்) ஆகிய கோயில்களை சுற்றிப்பார்க்க வாய்ப்பை தமிழக அரசின் சுற்றுலாதுறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாவிற்கு ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அம்மன் கோயில் ஆன்மிக சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்ய www.ttdconline.com
மற்றும் தொலைபேசி மூலம் முன்பதிவு 1800 4253 1111- நேரில் வந்து பதிவு செய்ய வேண்டிய முகவரி
TAMILNADU TOURISM COMPLEX NO.2, WALLAJAH ROAD, CHENNAI-600002, TAMILNADU, INDIA.
044-25333444, 044-25333333
+917550063121, 9176995870
E-mail: ttdcsalescounter@gmail.com