- Home
- Tamil Nadu News
- விபத்தில் சிக்கிய லாரி! சாலையில் கொட்டிய கிங்ஃபிஷர் பீர்பாட்டில்கள்! ஐயோ போச்சே போச்சே புலம்பும் குடிமகன்கள்!
விபத்தில் சிக்கிய லாரி! சாலையில் கொட்டிய கிங்ஃபிஷர் பீர்பாட்டில்கள்! ஐயோ போச்சே போச்சே புலம்பும் குடிமகன்கள்!
பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்தால் சாலையில் பீர் பாட்டில்கள் கொட்டி சிதறியதுடன், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

லாரி விபத்து
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பீர் பாட்டில்கள் ஏற்றுச் சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிங்ஃபிஷர் பீர்
சென்னையில் இருந்து சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள குடோனுக்கு கிங்ஃபிஷர் பீர் பாட்டில்களை ஏற்றி கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. லாரி சாலையின் ஆபத்தான வளைவில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பீர் பாட்டில்கள் சாலையில் கொட்டியது.
பீர் பாட்டில்கள்
விபத்து நிகழ்ந்த இடத்தில் பீர் பாட்டில்களை எடுத்துச் செல்லாமல் தடுக்கும் வகையில் போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் மோப்பிரிப்பட்டி சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அருகில் இருந்த இளைஞர்கள் இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
புலம்பும் குடிமகன்கள்
பின்னர் சாலை நடுவே சிக்கியுள்ள லாரியை அப்புறப்படுத்த கிரேன் கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்த ஓட்டுநரின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதனையடுத்து உயிரிழந்த ஒட்டுநரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக அரூர் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பீர் பாட்டில்கள் சாலைகளில் வெள்ளம் ஓடியதால் குடிமகன்கள் அதை பார்த்து புலம்பி வருகின்றனர்.