- Home
- Tamil Nadu News
- இன்றைய TOP 10 செய்திகள்: சர்ப்ரைஸ் கொடுத்த இந்திய அணி... இஸ்ரோவின் அடுத்த ராக்கெட்
இன்றைய TOP 10 செய்திகள்: சர்ப்ரைஸ் கொடுத்த இந்திய அணி... இஸ்ரோவின் அடுத்த ராக்கெட்
இந்தியா 75,000 கிலோ எடை தாங்கும் புதிய ராக்கெட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு முக்கிய செய்திகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

இஸ்ரோவின் அடுத்த ராக்கெட்
உஸ்மானியா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், இந்தியாவின் புதிய விண்வெளித் திட்டங்கள் குறித்தும், 75,000 கிலோ எடை தாங்கும் ராக்கெட் உருவாக்கம் குறித்தும் அவர் அறிவித்தார்.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 போட்டி வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து தொடரில் அசத்திய முகமது சிராஜ், காயம் அடைந்த ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் விளக்கம்
மாநில சட்டமன்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய காலக்கெடு குறித்து குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரிய நிலையில், முந்தைய தீர்ப்பை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை
ஆந்திரப் பிரதேச முதல்வர், ஒரு பக்தர் திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். தனது தொழில் வெற்றிக்கு நன்றிக்கடனாக இந்த நன்கொடையை வழங்குகிறார். இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.140 கோடி.
தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் படைவீரர்களுக்கு “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒரு கோடி ரூபாய் வரை குறைந்த வட்டியில் மானியக் கடன் உதவி, 30% மூலதன மானியம் மற்றும் 3% வட்டி மானியம் வழங்கப்படும்.
கூகுள் நிறுவனத்திற்கு ரூ.315 கோடி அபராதம்
ஆஸ்திரேலியாவில் இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியைக் கட்டுப்படுத்தும் விதமாக கூகுள் சட்டவிரோத ஒப்பந்தம் செய்ததற்காக ரூ.315 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆரோக்கியமான போட்டியைத் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைனுக்கு டிரம்ப் அளித்த வாக்குறுதி
உக்ரைனுக்கு அமெரிக்கா விமானப்படை உதவி அளிக்கத் தயார் என்றும், ஐரோப்பிய நாடுகள் தரைப்படை உதவியைத் தரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய டிரம்ப், “ஐரோப்பிய நாடுகள் தரைப்படைகளை நிறுத்தத் தயார் நிலையில் உள்ளன. நாங்கள் விமான ஆதரவுடன் உதவத் தயாராக இருக்கிறோம். உள்ள வான்வழி உபகரணங்கள், ஆயுதங்கள் உலகின் வேறு எந்த நாட்டுக்கும் இல்லை” என்று கூறினார். ஆனால், அமெரிக்கத் தலைவர்கள் உக்ரைனில் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் உறுதி அளித்தார்.
குஷியில் எடப்பாடி பழனிசாமி!
உக்ரைனுக்கு அமெரிக்கா விமானப்படை உதவி அளிக்கத் தயார் என்றும், ஐரோப்பிய நாடுகள் தரைப்படை உதவி அளிக்கத் தயார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
து கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார். எனவே, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும், வழக்கின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்தும், சூர்யமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
பிளிபித் புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி டிரோன் பறக்கவிட்டு வீடியோ எடுத்த சமூக ஊடக பிரபலத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விண்வெளி வீரர்கள் குழு
இந்தியாவுக்கு 40-50 விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு பெரிய குழுவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் விண்வெளியில் இருந்து திரும்பிய சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பின்போது இந்த கருத்தை தெரிவித்தார்.