School College Holiday: மாணவர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை!
ஃபெங்கல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. மழைநீர் சூழ்ந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஃபெங்கல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால், இம்மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
school holiday
குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான பகுதியில் அரசு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் அரசு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: School Holiday: வரும் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியானது சூப்பர் அறிவிப்பு!
இதனிடையே அதி கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
School holiday
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகளில் வெள்ள நீர் வாடியாததால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் பழனி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 5வது நாளாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.