அதிரடியாக குறைந்த தக்காளி விலை... ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை- அள்ளிச்சென்ற பொதுமக்கள்
தக்காளி விலை கடந்த மாதம் 200 ரூபாயை தொட்ட நிலையில் தற்போது அதிரடியாக குறைந்து மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்ததகத்தில் 15 முதல் 20 ரூபாய்க்கு விற்க்கப்பட்டு வருகிறது.
தக்காளி விலை என்ன.?
தங்கத்துக்கு நிகராக தக்காளி விலை கடந்த மாதம் உச்சத்தை அடைந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கிலோ 200 ரூபாய் என்ற நிலையை எட்டியது. இதன் காரணமாக தக்காளியை பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையில் வாங்கி சென்றனர். மேலும் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளி சார்ந்த உணவு பொருட்களாக தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி தொக்கு போன்ற உணவுகள் தயாரிப்பதை தவிர்த்தனர்.
Tomato price hike
திடீர் தக்காளி விலை உயர்ந்தது ஏன்.?
இதனையடுத்து தக்காளி விலை உச்சத்தில் இருந்ததால் தமிழக அரசு சார்பாக நியாய விலைக்கடைகளில் தக்காளியை ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்காத காரணத்தால் அதிக விலை கொடுத்தே தக்காளி வாங்கும் நிலை ஏற்பட்டது.
தக்காளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டு தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக குப்பைகளில் தக்காளியை கொட்டும் நிலை இருந்தது. இதனால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் மாற்று பயிர் செய்ததால் தக்காளி விலை அதிகரித்ததாக தெரிவித்தனர்.
ஒரு கிலோ தக்காளி ரூ.10
மேலும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1100 டன் தக்காளி வரத்து வந்த நிலை மாறி 300 முதல் 450 டன் மட்டுமே தக்காளி வரத்து வந்ததால் விலை உச்சத்தை தொட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் கோயம்பேடு மொத்த சந்தையில் தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ 200 விற்ற நிலையில் தற்போது 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும் தக்காளி விற்பனை ஆகிறது. தக்காளி விலை உச்சத்தை தொட்டதால் விவசாயிகள் அதிகளவு தக்காளி பயிரிட்ட காரணத்தில் கோயம்பேட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்