- Home
- Tamil Nadu News
- ஒரே நாளில் சரசர வென குறைந்த தாக்காளி விலை..! கோயம்பேட்டில் 1 கிலோ தக்காளி எவ்வளவு தெரியுமா.?
ஒரே நாளில் சரசர வென குறைந்த தாக்காளி விலை..! கோயம்பேட்டில் 1 கிலோ தக்காளி எவ்வளவு தெரியுமா.?
தக்காளி விலை கோயம்பேடு மார்கெட்டில் 200 ரூபாயை தொட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சர சரவென 40 ரூபாய் குறைந்து 140 முதல் 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதிகரிக்கும் தக்காளி விலை
தங்கத்தைப்போன்று தக்காளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தக்காளியை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40, 60, 100 என உயர்ந்த தக்காளி விலை 200ரூபாயை நேற்று தொட்டது.
இதன் காரணமாக வீட்டில் தக்காளி இல்லாத சமையலை செய்ய இல்லத்தரசிகள் மாற்று வழியை தேட தொடங்கியுள்ளனர். மேலும் ஓட்டல்களிலும் தக்காளி சாதம், தக்காளி தொக்கு, தக்காளி சட்னி போன்ற உணவுகளை தயாரிப்பதையும் நிறுத்திக்கொண்டுள்ளனர்.
தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
தக்காளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஆந்திரா, கர்நாடகா பகுதி விவசாயிகளுக்கு தக்காளி விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்காததால் அவர்கள் மாற்று விவசாயத்தை செய்ய தொடங்கி விட்டனர். அதன் காரணமாகவே தக்காளி உற்பத்தி குறைந்து விட்டதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஒரு நாளைக்கு கோயம்பேடு சந்தைக்கு 1100 டன் தக்காளி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 400 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன் தினம் 170 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி விலை நேற்று 180 முதல் 200 ரூபாயை எட்டியது. வெளி சந்தையில் 220 ரூபாய் வரை தக்காளி விற்கப்பட்டது.
தக்காளி விலை ரூ.40 குறைந்தது
இந்தநிலையில் தக்காளி விலை இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே நாளில் 40 ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக 140 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. வெளி சந்தையில் 180 ரூபாய்க்கு தக்காளி விற்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் நியாவிலைக்கடைகளில் தக்காளி 60ரூபாய்க்கு விற்கப்படவுள்ளது.
இதையும் படியுங்கள்