திடீரென அதிகரித்த தக்காளி விலை.. உச்சத்தை தொடும் வெங்காயம்.. கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
மழை மற்றும் வரத்து குறைவின் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
onion
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்ததன் காரணமாக விற்பனை விலையானது சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 62 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவரைக்காய் விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் 1 கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இஞ்சி விலை நிலவரம் என்ன.?
பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 240க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதையும் படியுங்கள்
மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப்பில் முன்பதிவு செய்யலாம்.. எப்படி தெரியுமா? முழு விபரம் இதோ !!