டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட்நியூஸ்! குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது! ரிசல்ட் பார்ப்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வர்களின் நலன் கருதியும் தெரிவுப்பணிகளை விரைவுபடுத்தவும் 2024ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளின் முடிவுகள் 2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில் விரைவாக வெளியிடப் பட்டுள்ளன.
TNPSC Group 2 Exam
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2,327 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ம் தேதி வெளியாகி ஜூலை 19 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழக முழுவதும் மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.40 பேர் மட்டுமே தேர்வை எழுதினர்.
TNPSC Group 2A Exam
இந்நிலையில் திருத்தப்பட்ட பணிகளின் அடிப்படையில் வனத்துறையில் வனவர் பணி இடங்கள் 121 ஆகவும், குற்ற விசாரணைத் துறையில் 22 பணி இடங்கள் ஆகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் 3 ஆகவும், தொழிலாளர் துறையில் 16 ஆகவும், சட்டத் துறையில் 6 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக குரூப் 2 தேர்வுக்கு 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், மொத்த காலியிடங்கள் 2,327-ல் இருந்து 2 ஆயிரத்து 540 ஆக உயர்த்தி தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டது.
TNPSC News
இந்நிலையில் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால் எதிர்பார்த்து காத்துகிடந்தனர். இந்நிலையில் தேர்வு நடைபெற்று 57 வேலை நாட்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
TNSPC Group 2
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப்பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளை நடத்தி வருகிறது. தேர்வர்களின் நலன் கருதியும் தெரிவுப்பணிகளை விரைவுபடுத்தவும் 2024ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளின் முடிவுகள் 2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில் விரைவாக வெளியிடப் பட்டுள்ளன.
TNPSC Group 2 Result
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (தொகுதி | பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 33 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி | மற்றும் IIA பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 57 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள்)க்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களுக்குள்ளும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.