டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு முக்கிய செய்தி! இன்றே கடைசி நாள்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்துதல், தேர்வு மையம் தேர்வு செய்தல் மற்றும் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கான இன்று கடைசி நாளாகும்.
TNPSC
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றது. எப்படியாவது அரசு பணியில் சேர்ந்து விட என்பதால் குறைந்த காலி பணியிடங்கள் என்றாலும் எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுகின்றனர். டிஎன்பிஎஸ்சியை பொறுத்த வரையில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன.
tnpsc group 2
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2,540 காலி பணியிடங்களுக்காக செப்டம்பர் 14ம் தேர்வு நடைபெற்றது. இதற்கு 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.81 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்நிலையில் தேர்வு நடைபெற்று 57 வேலை நாட்களில் அதாவது டிசம்பர் 12-ம் தேதி முடிவுகள் வெளியாகி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
Group 2 Exam
இதனையடுத்து குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. அதேபோல் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முதல் தாளாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாள் பிப்ரவரி 23ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Main Exam
இந்நிலையில் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்க தேர்வு கட்டணம் செலுத்துதல் தமிழ்த் தகுதித் தேர்வுக்கு விலக்குப்பெற சான்றிதழ் பதிவேற்றம் தேர்வு மையத்தை தேர்ந்தெடுப்பது ஆகியவற்றை மேற்கொள்ள தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
tnpsc vacancies
அதன்படி தேர்வுக் கட்டணம் செலுத்தவும் தேர்வு மையத்தை தேர்வு செய்யும் சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்று கடைசி நாளாகும். அதேபோல் தமிழ் தகுதித் தேர்விற்கு விலக்குக் கோரும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.