MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போகி அன்று 'இதை' மட்டும் செஞ்சிடாதீங்க.. மீறினால் சிக்கல்.. அரசின் முக்கிய அட்வைஸ்!

போகி அன்று 'இதை' மட்டும் செஞ்சிடாதீங்க.. மீறினால் சிக்கல்.. அரசின் முக்கிய அட்வைஸ்!

பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

2 Min read
Author : Rayar r
Published : Jan 08 2026, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
போகி பண்டிகை
Image Credit : our own

போகி பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் ஜனவரி 14ம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

24
முன்னோர்கள் கொண்டாடிய போகி
Image Credit : our own

முன்னோர்கள் கொண்டாடிய போகி

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

ரப்பர் பொருட்கள், டயர்களை எரிப்பதால் காற்று மாசுபாடு

ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்பொழுது போகிப்பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

Related Articles

Related image1
நஞ்சாகும் மூச்சுக் காற்று ! காற்று மாசுபாடு பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Related image2
போகி கெண்டாட்டத்தால் அதிகரித்த காற்று மாசு...விமான சேவை பாதிப்பு- சென்னையில் இவ்வளவு மாசு பதிவாகியிருக்கா.?
34
பொதுமக்களுக்கு பாதிப்பு
Image Credit : our own

பொதுமக்களுக்கு பாதிப்பு

சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

விழிப்புணர்வுப் பிரச்சாரம்

இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 21 ஆண்டுகளாக போகிப்பண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. 

இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.

44
காற்றுத்தரம் கண்காணிக்கப்படும்
Image Credit : ANI

காற்றுத்தரம் கண்காணிக்கப்படும்

மேலும், போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க, காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

இந்த 2026 ஆம் ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து செய்வதற்கு ஏற்பாடு மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பொங்கல்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் பிரீமியம் பேருந்து சேவை! என்னென்ன சிறப்பு அம்சங்கள்.. எந்தெந்த வழித்தடம்? முன்பதிவு செய்வது எப்படி?
Recommended image2
இனி Tea Break கிடையாது.! டீ, காபி விலையேற்றத்தால் தள்ளாடும் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை!
Recommended image3
Now Playing
BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
Related Stories
Recommended image1
நஞ்சாகும் மூச்சுக் காற்று ! காற்று மாசுபாடு பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Recommended image2
போகி கெண்டாட்டத்தால் அதிகரித்த காற்று மாசு...விமான சேவை பாதிப்பு- சென்னையில் இவ்வளவு மாசு பதிவாகியிருக்கா.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved