போகி கெண்டாட்டத்தால் அதிகரித்த காற்று மாசு...விமான சேவை பாதிப்பு- சென்னையில் இவ்வளவு மாசு பதிவாகியிருக்கா.?
போகி கொண்டாட்டத்தால் சென்னையில் காற்றின் மாசு மோசமாக அதிகரித்திருப்பதால், விமான சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்வபர்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போகி பண்டிகை கொண்டாட்டம்
பழையன கழிதலும், புதியன புகுதலும் என போகிப்பண்டிகையை மக்கள் மேளதாளத்தோடு கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் பழை பொருட்களை தீயிட்டு எரித்து வருவதால் சென்னை நகர் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. அருகில் இருக்கும் நபர்கள் கூட தெரியாத அளவிற்கு புகை மற்றும் பனி சேர்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஓட்டுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகர் முழுவதும் புகை மண்டலம் மற்றும் பனி சூழ்ந்துள்ளதால் மணலி பகுதியில் காற்றின் தரம் 277 என்ற மோசமான குறியீட்டை அடைந்துள்ளது.
விமான சேவே பாதிப்பு
இதனை தொடர்ந்து பெருங்குடி பகுதியில் காற்றின் தரம் 272, எண்ணூரில் 217, அரும்பாக்கத்தில் 200, ராயபுரத்தில் 199, கொடுங்கையூரில் 154, ஆலந்தூரில் 125 என்ற விகிதத்தில் காற்றின் தரமானது உள்ளது. இதனால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விமான சேவைகளும் பாதிப்படைந்துள்ளது. சிங்கப்பூர், லண்டன், டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத்திற்கு திரும்பி அனுப்பப்பட்டது. இதே போல சென்னையில் இருந்து அந்தமான், புனே மும்பை,டெல்லி, மதுரை,தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்