MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்.. வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!

அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்.. வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? என்பது குறித்து பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Mar 05 2026, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் மழை
Image Credit : Google

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தியெடுக்க தொடங்கியுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை என அனைத்து மாவட்டங்களிலும் வெயில் பாடாய்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக மழைக்கான அறிகுறியே இல்லை. மழை எப்போது பெய்யும்? என மக்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கோவை, நீலகிரியில் மழை
Image Credit : our own

கோவை, நீலகிரியில் மழை

அதாவது மார்ச் 5ம் தேதி (இன்று) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதே வேளையில் ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

34
டெல்டா மாவட்டங்களில் மழை
Image Credit : our own

டெல்டா மாவட்டங்களில் மழை

8ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 9ம் தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 10ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

44
சென்னையில் எப்படி?
Image Credit : Asianet News

சென்னையில் எப்படி?

11ம் தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
வானிலை அறிக்கை
மழை செய்திகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: விவசாயிகளுக்கு ஜாக்பாட்! 50% மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர் – தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்!
Recommended image2
TNEB : மின்தடையை இந்த வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம்! 24 மணி நேரமும் சேவை!
Recommended image3
PMFME Scheme: சொந்தமாக ஊறுகாய், மசாலா பிசினஸ் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் மானியம் வழங்கும் மத்திய அரசு; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!
Related Stories
Recommended image1
வெதர்மேன் சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய மழை.. மகிழ்ச்சியில் விவசாயிகள் பொதுமக்கள்!
Recommended image2
மழை வருமா? வெயில் சுட்டெரிக்கப் போகுதா? வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved