- Home
- Tamil Nadu News
- தமிழக மக்களுக்கு ஷாக் கொடுத்த மின் வாரியம்.! நாளை 5 மணி நேரம் பவர் கட்- இத்தனை பகுதிகளிலா.?
தமிழக மக்களுக்கு ஷாக் கொடுத்த மின் வாரியம்.! நாளை 5 மணி நேரம் பவர் கட்- இத்தனை பகுதிகளிலா.?
தமிழ்நாடு மின்சார வாரியம் செவ்வாய்க்கிழமை (04.02.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின் தடை
மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு ஏற்ப சமையல் செய்வது முதல் வாகனங்கள் இயக்குவது வரை அத்தியாவசிய தேவையாக மின்சாரம் மாறிவிட்டது. இந்த நிலையில் ஒரு நிமிடம் கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் இருக்க முடியாத நிலை உருவாகிவிட்டது.
இந்த நிலையில் நாள் தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்யப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செவ்வாய்க்கிழமை நாளை (04.02.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின் தடை பகுதிகள்
சென்னை
சின்மயா நகர்: கம்பர் தெரு, காந்தி தெரு, ராகவேந்திரா காலனி, வாரியார் தெரு, இந்திரா நகர், ராஜீவ் காந்தி தெரு, கண்ணகி தெரு, கிரஹலட்சுமி அபார்ட்மென்ட், சஞ்சய் காந்தி நகர், வாயுபுத்ரா தெரு, இளங்கோ நகர் தெற்கு, சாய் நகர், காளியம்மன் கோயில் தெரு, மேற்கு நடேசன் நகர், பச்சையம்மன் கோயில் தெரு,
கங்கையம்மன் கோயில் தெரு, இளங்கோ நகர், சாய்பாபா காலனி, ரத்னா நகர், தாராசந்த் நகர், எல் மற்றும் டி காலனி, சிஆர்ஆர் புரம், விநாயகம் அவென்யூ, பாலாம்பால் நகர், தங்கல் தெரு, ரெட்டி தெருவின் ஒரு பகுதி, பள்ளி தெரு, ஜெயின் அபார்ட்மென்ட், கிருஷ்ணா நகர் 4 வது தெரு, பாலாஜி நகர், எஸ்பிஐ காலனி 1 முதல் 3 பகுதி, பிஏ காலனி, மேட்டுக்குப்பம், புவனேஸ்வரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி.
பல்லாவரம், காட்டுப்பாக்கம், புழல்
பல்லாவரம்:
பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திருசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், மலகாந்த புரம், பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர் பகுதி, தர்கா சாலை, பல்லவ கார்டன், பி.வி. வைத்தியலிங்கம் சாலை, ஈசா பல்லாவரம், பாரதி நகர், பச்சையப்பன் காலனி, கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை சுபம் நகர், முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி,
காட்டுப்பாக்கம் :
அன்னை இந்திரா நகர், புஷ்பா நகர், விஜயலட்சுமி நகர், பாவேந்தர் நகர், ராம் தாஸ் நகர், லட்சுமி நகர், இந்திரா நகர் பகுதி.
புழல்:
சூரப்பேட்டை, ரெட்ஹில்ஸ் மார்க்கெட் ரோடு, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், மெட்ரோவாட்டர் புழல், புழல் சிறை 1 முதல் 3 பகுதி.
போரூர், செம்பியம் மின் தடை பகுதிகள்
போரூர் :
ராமகிருஷ்ணா 1 முதல் 7 வது அவென்யூ, ரம்யா நகர், வயர்லெஸ் ஸ்டேஷன் ரோடு, ரெநகர் 5 வது தெரு, ஜெய பாரதி நகர், உதயா நகர், குருசாமி நகர், ராஜ ராஜேஸ்வர் நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.
செம்பியம்:
காவேரி சாலை 1 முதல் 8 வது தெரு, தொண்டியார்பேட்டை உயர் சாலை, பெரம்பூர், கொடுங்கையூர், ஜிஎன்டி சாலை, காந்தி நகர், பிபி சாலை, மாதவர்ம் பகுதி.
ராணிப்பேட்டை, கரூர், கள்ளக்குறிச்சி மின்தடை பகுதிகள்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு நகரம் முழுவதும், உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, ராமாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம், சின்னக்கிணத்து பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், லட்சுமணம்பட்டி, சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர்,பொரணி வடக்கு ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படவுள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், பாண்டலம், விரியூர், எஸ்.வி.பாளையம், எஸ்.குளத்தூர், மேலேரி, ஜவுளிகுப்பம், மேலப்பட்டு, கீழப்பட்டு, வட சிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆரூர், ராமராஜபுரம். அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்தூர், பொய்க்குணம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
திருவாரூர் மின் வெட்டு பகுதிகள்
திருவாரூர்
திருவாரூர் கடைவீதி, தெற்குவீதி, புதுத்தெரு, சேந்தமங்கலம், கொடிக்கால்பாளையம், கிடாரங்கொண்டான், கல்லுகுடி, ஒடாச்சேரி, ஆந்தகுடி, அலிவலம், விளமல், மாங்குடி, கூடுர், முகந்தனூர், அம்மையப்பன், மாவூர், காட்டூர், பவித்திரமாணிக்கம், அகரதிருநல்லூர், திருகண்ணமங்கை, பெரும்பண்ணையூர், கொரடாச்சேரி,
மதுரா நகர், தஞ்சை சாலை, வடக்கு வீதி, மடப்புரம், ஆண்டார் தெரு, நெய்விளக்கு தோப்பு, இ.பி.காலனி, இ.வி.எஸ். நகர், தென்றல் நகர், ராமநாதன் நகர், கேக்கரை, மருதப்பட்டினம், அடியக்கமங்கலம், நீலாப்பாடி, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.
திருத்துறைப்பூண்டி நகர், விளக்குடி பள்ளாங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொறுக்கை, கொக்கலாடி, பெருகவாழ்ந்தான், பாலையூர், சித்தமல்லி, பெருவிடைமருதூர், வேலூர், பாண்டி, குன்னலூர், இடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், நாணலூர், தேவதானம் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.
தஞ்சாவூர் மின் தடை பகுதிகள்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெருப்பலான பகுதிகளில் மின் தடை நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த வகையில், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், என்.எஸ்.சி. போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர்,
கூட்டுறவு காலனி, நடராஜபுரம் தெற்கு காலனி, நிர்மலா நகர், புதிய வீட்டு வசதி வாரியம் மருதம், நெய்தல், நட்சத்திரநகர், வி.பி.கார்டன், ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளாகிய கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன்குடிகாடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார்குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போல கோவை, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.