- Home
- Tamil Nadu News
- சூப்பர் சான்ஸ்.! மின் கட்டணம், குறைந்த மின் அழுத்தத்திற்கு ஒரே நாளில் தீர்வு- தேதி குறித்த மின்சார வாரியம்
சூப்பர் சான்ஸ்.! மின் கட்டணம், குறைந்த மின் அழுத்தத்திற்கு ஒரே நாளில் தீர்வு- தேதி குறித்த மின்சார வாரியம்
மின் கட்டணம், மீட்டர், குறைந்த மின் அழுத்தம் உள்ளிட்ட புகார்களை ஒரே நாளில் தீர்க்க TNEB சிறப்பு முகாம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 5, 2025 அன்று அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் முகாம் நடைபெறும்.

TNEB special camp : மின்சார இல்லாமல் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது ஒரு நிமிடம் மின்சாரம் இல்லையென்றால் கூட மனித வாழ்க்கையில் அடுத்த கால் அடி எடுத்து வைக்க முடியாத வகையில் மின்சாரம் முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் சமையல் செய்வது முதல் ரயில் இயக்குவது வரை மின்சாரம் அத்தியாவசியமாகவிட்டது.
இந்த நிலையில் தற்போதைய நவீன காலகட்டத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கு ஏசிக்கு அடிமையாகிவிட்டனர். எனவே மின்சாரம் தடைப்பட்டால் அடுத்த நொடியே மின்சார வாரியத்திற்கு போன் செய்ய தொடங்கிவிடுவார்கள். எனவே மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மின்சாரம் உள்ளது.
TNEB
மின் கட்டண புகாருக்கு தீர்வு
இந்த நிலையில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலையில் புகார்களும் குவிந்து வருகிறது. மின் கட்டணம் அதிகமாக வருகிறது. மின் மீட்டர் சரியாக இல்லை, குறைந்த அழுத்த மின்சாரம் வருகிறது. மின்கம்பத்தால் உயிரிக்கு ஆபத்து என பல புகார்களை பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு அனுப்பி வருகிறார்கள்.
அதற்கு பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மின்சார வாரியம் முக்கிய முடிவை அறிவித்துள்ளது. அதன் படி சிறப்பு முகாமிற்கான தேதியை வெளியிட்டுள்ளது.
மின்வாரியத்தின் சிறப்பு முகாம்
இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை. மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின்,
அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள்/இ&ப (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புகார்களுக்கு உடனடி தீர்வு
அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள். குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும். மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.