MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Weather Update: இன்று 4 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்; 13 மாவட்டங்களில் கனமழை.. உங்க ஊர் இருக்கா?

TN Weather Update: இன்று 4 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்; 13 மாவட்டங்களில் கனமழை.. உங்க ஊர் இருக்கா?

TN Weather Update: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Jun 06 2026, 08:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்
Image Credit : our own

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில் ஒருபக்கம் வெயிலும் மறுபக்கம் பரவலாக மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலில் வாடிப்போய் இருந்த ஒரு சில மாவட்ட மக்களுக்கு நிம்மதி பிறந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும் (ஆரஞ்ச் அலர்ட்), 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
 12 மாவட்டங்களில் கனமழை
Image Credit : Asianet News

12 மாவட்டங்களில் கனமழை

அதாவது ஜூன் 6ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
TN Rain Alert: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்!
Related image2
Rain: ஆறு நாட்களுக்கு அலறப்போகும் தமிழகம்! கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்!
34
நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை?
Image Credit : Google

நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை?

ஜூன் 7ஆம் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

44
வெயில் குறையும்; மக்களுக்கு ஆறுதல்
Image Credit : Getty

வெயில் குறையும்; மக்களுக்கு ஆறுதல்

ஜூன் 8ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதேபோல் 6ஆம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெயில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வானிலை அறிக்கை
கனமழை
மழை செய்திகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
Recommended image2
KN Nehru: கே.என்.நேருவுக்கு சுத்துப்போட்ட முதல்வர் விஜய்.! அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! நடந்தது என்ன?
Recommended image3
SSLC Mark Sheet Corrections: 10-வது மதிப்பெண் சான்றிதழில் பிழையா? திருத்தம் செய்வது எப்படி? அரசு தேர்வுகள் முக்கிய அப்டேட்!
Related Stories
Recommended image1
TN Rain Alert: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்!
Recommended image2
Rain: ஆறு நாட்களுக்கு அலறப்போகும் தமிழகம்! கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved