- Home
- Tamil Nadu News
- Magalir Urimai Thogai: பெண்களுக்கு ஜாக்பாட்! மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது? முக்கிய அறிவிப்பு!
Magalir Urimai Thogai: பெண்களுக்கு ஜாக்பாட்! மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது? முக்கிய அறிவிப்பு!
TN Magalir Urimai Thogai Rs 2500 & Free Bus Travel:: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்குவது குறித்தும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500
தமிழ்நாட்டில் கடந்த முறை ஆட்சி செய்த திமுக அரசு பெண்களுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் மாதந்தோறும் 1,000 உரிமைத்தொகை வழங்கி வந்தது. தேர்தலுக்கு பிறகு இது ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என திமுக கூறியிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்யின் தவெக அமோக வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சியில் அமர்ந்தது. தவெக தனது தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகையை 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது கிடைக்கும்?
இதனால் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2,500 எப்போது கிடைக்கும்? என பெண்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தவெக அரசு கடந்த மே மாதம் வழக்கமாக வழங்கப்படும் 1,000 ரூபாயையே வங்கி கணக்கில் விடுவித்ததால் பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரம் மே மாதத்துக்கான ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையை விடுவித்த தவெக அரசு, இந்த திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று கூறியிருந்தது.
அதாவது கடந்த திமுக ஆட்சியில் தகுதியில்லாத சில பெண்களும் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தனர். பல வீடுகள் கட்டி அதிக சொத்துகளும் வைத்திருந்த சில குடும்ப தலைவிகளும், கட்சியின் பெயரை சொல்லி வசதி படைத்தவர்களும் மகளிர் உரிமைத் தொகையை பெற்று வந்தனர் என கூறப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் மறுசீரமைப்பு
ஆகவே இதுபோன்ற தகுதியில்லாதவர்களை மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இருந்து விடுவித்து, தகுதியானவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில் கணக்கீடு பணி தொடங்கியுள்ளதாகவும், இந்த பணிகள் முடிந்தவுடன், அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுடன் மதிப்புமிகு மகளிர் திட்டம் அதாவது மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தவெக அரசு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
தவெக அமைச்சரவை கூட்டம்
இந்த நிலையில், தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூன் 5) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, நிதி நிலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தவெக அரசு வாக்குறுதி அளித்த மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500, பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம் இன்னும் செயல்படுத்தப்படாததால் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
பெண்களுக்கு குட்நியூஸ்
ஆகவே இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த இரண்டில் ஒன்று அறிவிப்பில் முக்கியமாக இடம்பெறும் என்றும் குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெண்கள் குஷியாகியுள்ளனர்.

