CM Josaph Vijay: ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில், 2026 மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படுமென தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வரவு வைக்கப்படுவது வழங்கம். இதனிடையே தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை தொடர்ந்து வழங்கப்படுமா..? உதவித் தொகை உயர்த்தப்படுமா..? உள்ளிட்ட கேள்விகள் எழுந்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில் முதல்வர் ஜோசப் விஜய் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒவ்வொரு மாதமும் தமிழக மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத் தொகையானது மே மாதத்திற்கும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாதத்திற்கான உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் அதனை முடித்துவிட்டு விரைவில் வரவு வைக்கப்படும்” என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.