MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு வசூலிக்கிறாங்களா.! ஒரே ஒரு மெசேஜ் போதும்... பயணிகளுக்கு அசத்தலான அறிவிப்பு

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு வசூலிக்கிறாங்களா.! ஒரே ஒரு மெசேஜ் போதும்... பயணிகளுக்கு அசத்தலான அறிவிப்பு

Private bus fare : தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகள் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதால், போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.

2 Min read
Ajmal Khan
Published : Oct 14 2025, 07:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரயில், பேருந்து மற்றும் சொந்த கார்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

இந்த நிலையில் அனைத்து ரயில்களிலும் இடம் காலியாகிவிட்டதால் தனியார் பேருந்து மூலம் பயணம் செய்ய பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் பேருந்து பயண கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லவே 5ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

25
Image Credit : our own

இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 14.10.2025 முதல் 21.10.2025 வரையில் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு விழாக்காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை மூலம் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 போக்குவரத்து ஆணையர் அறிவுரையின் கீழ் வரன்முறைகளை பின்பற்றும் படி அனைத்து சரக இணைப்போக்குவரத்து ஆணையர்கள் மற்றும் துணைப்போக்குவரத்து ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

Related image1
ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு!
Related image2
சென்னை டூ மதுரை ரூ.5000.. அதிகாரம் கையில் இருக்கும் போது ஏன் இப்படி கெஞ்சுறீங்க.. அரசுக்கு எதிராக பொங்கும் அன்புமணி
35
Image Credit : our own

1. எதிர்வரும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.

2. அரசு பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் செல்ல சுங்கச்சாவடியில் தனி வழி (Separate Bay) அமைக்க சுங்க சாவடி அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரான வாகன போக்குவரத்தினை உறுதிசெய்ய தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

3. மோட்டார் வாகன ஆய்வாளர்களை சுங்க சாவடிகளில் பணியமர்த்தி அரசு பேருந்துகள் விரைவாக சுங்கசாவடியை கடந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

45
Image Credit : our own

4. அவ்வாறு சுங்கச்சாவடிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பணியின் போது தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளையும் ஆய்வு செய்து உரிய வரி மற்றும் ஆவணங்கள் நடப்பில் உள்ளதா என்பதை கண்டறிந்து, குறைபாடுடைய வாகனங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகார்களுக்கு கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க வேண்டப்படுகிறது.

55
Image Credit : our own

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை- 1800 425 5161

இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு)- 97893 69634

இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு)- 93613 41926

இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை- 90953 66394

இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர்- 93848 08302

துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம்- 96773 98825

துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர்- 98400 23011

துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம்- 78456 36423

துணைப்போக்குவரத்து ஆணையரகம். ஈரோடு- 99949 47830

துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி- 90660 32343

துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர்- 90257 23800

துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி- 96981 18011

துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர்- 95850 20865

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
தீபாவளி பண்டிகை
தீபாவளி விடுமுறை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved