தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு.! யாருக்கெல்லாம் தெரியுமா.?
Kalaimamani awards : தமிழ்நாடு அரசு 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.

Kalaimamani Awards Full Winners List
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.
தற்போது, 2021. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளது.
கலைமாமணி விருது
2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் இணைப்பில் கண்டவாறு தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவித்துள்ளது.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும். மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது
கலைமாமணி விருது வென்றவர்கள் யார்... யார்?
பாரதியார் விருது (இயல்) - முனைவர் ந. முருகேச பாண்டியன்
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) - பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ்
பாலசரசுவதி விருது (நாட்டியம்) - பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்
அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்படும் சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம் மற்றும் சிறந்த நாடகக்குழுவிற்கான சுழற் கேடயம் பெறுவதற்குரிய கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழு கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கலை நிறுவனம்- தமிழ் இசைச் சங்கம், சென்னை (ராஜா அண்ணாமலை மன்றம்)
சிறந்த நாடகக் குழு - கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம்.
சிறந்த கலை நிறுவனத்திற்கு வழங்கப்படும் கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கு வழங்கப்படும் சுழற் கேடயத்துடன் தலா ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில், 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள், அகில இந்திய விருதுகள், சிறந்த கலை குழுவினருக்கான கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்படும்.
சாய் பல்லவிக்கு கலைமாமணி விருது
2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நாடக நடிகர் பூச்சி முருகன், திரைப்பட நடிகர் எஸ் ஜே சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குனர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், சின்னத்திரை நடிகர் கமலேஷ் உள்ளிட்ட 30 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
2022ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட 30 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது திரைப்பட நடிகர் மணிகண்டன், ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பின்னணி பாடகர் ஸ்வேதா மோகன், திரைப்பட நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்ட 30 பேருக்கு வழங்கப்பட உள்ளது