MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Govt: இனி ஐந்தே நாளில் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு.. டோட்டலாக மாறும் சிஸ்டம்.. தமிழக அரசு அதிரடி!

TN Govt: இனி ஐந்தே நாளில் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு.. டோட்டலாக மாறும் சிஸ்டம்.. தமிழக அரசு அதிரடி!

TN Govt: தமிழகத்தில் இனி சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு விண்ணப்பித்த ஐந்தே நாட்களில் கிடைக்கும். பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Jun 11 2026, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இனி ஐந்தே நாளில் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு
Image Credit : AI

இனி ஐந்தே நாளில் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு

தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான சேவைகளான சாதி சான்றிதழ், புதிய ரேஷன் கார்டு மற்றும் முதியோர் உதவித்தொகை போன்றவற்றை விண்ணப்பித்த ஐந்தே நாட்களில் நேரடியாக வழங்குவதற்கான அதிரடி நிர்வாகச் சீர்திருத்தங்களை தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் முழுமையாக அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஒரு மாதம் வரை ஆனது
Image Credit : chatgpt

ஒரு மாதம் வரை ஆனது

தற்போது நடைமுறையில் உள்ள ஆன்லைன் சிஸ்டம் மூலம் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் போது, பொதுமக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. அதாவது சாதி மற்றும் இதர சான்றிதழ்கள்: வழக்கமாக ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் என பல்வேறு கட்டப் பரிசீலனைகளைக் கடந்து தாசில்தார் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கு பொதுவாக 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை ஆகிறது. சில நேரங்களில் மலைவாழ் மக்கள் அல்லது சிறப்புப் பிரிவினருக்கான சான்றிதழ்கள் பெற மாதக்கணக்கில் கூட தாமதமாகிறது.

இதேபோல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்கள், தாலுகா அலுவலகங்களின் பணிச்சுமை மற்றும் கள ஆய்வுகளில் ஏற்படும் தாமதம் காரணமாக, பல மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நீண்ட கால தாமதத்தைக் குறைத்து, மக்களின் அலைச்சலைத் தவிர்க்கவே அரசு தற்போது இந்த அதிரடி மாற்றத்தை கையில் எடுத்துள்ளது.

Related Articles

Related image1
Ration Card Correction: அலைச்சல் இனி இல்லை! ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு 5 நிமிடத்தில் தீர்வு.. நாள் குறித்த தமிழக அரசு!
Related image2
Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
34
புதிய சிஸ்டம் எப்படி வேலை செய்யும்?
Image Credit : chatgpt

புதிய சிஸ்டம் எப்படி வேலை செய்யும்?

பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கவும், சேவைகளை மிக விரைவாக வழங்கவும் சாதி, வருமானம் உள்ளிட்ட 34 வகையான அத்தியாவசியச் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை முற்றிலும் சீரமைக்கப்பட உள்ளது.

துணை வட்டாட்சியர்களுக்கு அதிகாரம்: இனி பெரும்பாலான சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான முழு அதிகாரம், தாலுகா அலுவலகங்களில் உள்ள துணை வட்டாட்சியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

5 நாள் கெடு; ஆட்டோமேட்டிக் அப்ரூவல்: பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன், அந்தந்த பகுதி அதிகாரிகள் 5 நாட்களுக்குள் கள ஆய்வு செய்து பணிகளை முடிக்க வேண்டும். ஒருவேளை அதிகாரிகள் 5 நாட்களுக்குள் பரிசீலனை செய்யத் தவறினால், ஆன்லைன் மென்பொருள் மூலம் அந்த விண்ணப்பங்கள் தானாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் உருவாக்கப்படும் வகையில் புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட உள்ளது.

வட்டாட்சியர்களின் பணி மாற்றம்: இந்த அதிரடி மாற்றத்தால், வழக்கமான வட்டாட்சியர்கள் சான்றிதழ் வழங்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் மற்றும் நில நிர்வாகம் போன்ற முக்கியப் பணிகளில் மட்டுமே இனி தனிக் கவனம் செலுத்துவர்.

44
மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி
Image Credit : Asianet News

மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி

சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, உயர்கல்வி மற்றும் கல்லூரி சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் கல்லூரிகளில் சேருவதற்கு சாதி சான்றிதழ் மிக முக்கியமான ஆவணமாகும்.

தற்போது மாணவர்கள் பலரும் இச்சான்றிதழுக்காக விண்ணப்பித்து வரும் நிலையில், 5 நாட்களில் சான்றிதழ் என்ற அரசின் இந்த அதிரடி அறிவிப்பு மாணவச் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு
குடும்ப அட்டை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
TASMAC New Order: டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி! இனி இவர்கள் பீர், குவாட்டர் வாங்க முடியாது! அதிர்ச்சியில் குடிமகன்கள்
Recommended image2
PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.11,000 உதவித் தொகை.! விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன? முழு விவரம் இதோ.!
Recommended image3
Now Playing
TVK VIJAY: புது முகங்களை களமிறக்கும் தளபதி விஜய்! த்ரிஷா, சவுக்கு சங்கர் போட்டியா?
Related Stories
Recommended image1
Ration Card Correction: அலைச்சல் இனி இல்லை! ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு 5 நிமிடத்தில் தீர்வு.. நாள் குறித்த தமிழக அரசு!
Recommended image2
Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved