MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜயின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட ஸ்டாலின், எடப்பாடி.. தவெக எத்தனை சீட்டில் ஜெயிக்கும்?

விஜயின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட ஸ்டாலின், எடப்பாடி.. தவெக எத்தனை சீட்டில் ஜெயிக்கும்?

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் எக்சிட் போல்கள், திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான இடங்களைப் பெற்று, ஒரு புதிய சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பை இந்த கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 29 2026, 07:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக தேர்தல் கணிப்பு
Image Credit : Asianet News

தமிழக தேர்தல் கணிப்பு

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவடைவதைத் தொடர்ந்து வெளியாகியுள்ள எக்சிட் போல்கள், மாநில அரசியலில் புதிய சமன்பாட்டை வெளிப்படுத்துகின்றன. பல்வேறு ஆய்வு நிறுவனங்களின் கணிப்புகள் வெளியான நிலையில், NDTV – Axis My India இணைந்து வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் படி, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி 125 முதல் 145 இடங்கள் வரை வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

25
மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுக
Image Credit : Asianet News

மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுக

அதே நேரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி 65 முதல் 80 இடங்கள் வரை பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக, தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 24 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் சேர்த்து 2 முதல் 6 இடங்கள் வரை மட்டுமே பெறும் என இந்த ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் இருக்கும் நிலையில், இந்த கணிப்புகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதே சமயம், அதிமுக கூட்டணி எதிர்க்கட்சியாக வலுவான நிலையைத் தொடரும் எனவும் கணிக்கப்படுகிறது.

Related Articles

Related image1
முந்தும் அதிமுக.. விடாத திமுக.. கொங்கு முதல் டெல்டா வரை.. மண்டல வாரியான கருத்துக்கணிப்பு முடிவுகள்
Related image2
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?
35
தவெகவுக்கு அதிர்ச்சி கொடுத்த எக்சிட் போல்
Image Credit : Asianet News

தவெகவுக்கு அதிர்ச்சி கொடுத்த எக்சிட் போல்

இந்த தேர்தலின் தனிச்சிறப்பு, புதிய அரசியல் சக்திகளின் வருகை மற்றும் வாக்காளர்களின் மாற்றமான மனநிலை தான். விஜய் தலைமையிலான தவெக, முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கிய நிலையில், இருபதுக்கு அருகிலான இடங்களைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவெடுக்கக்கூடிய சாத்தியத்தை காட்டுகிறது.

45
மின்னம்பலம் வெளியிட்ட கணிப்பு
Image Credit : facebook

மின்னம்பலம் வெளியிட்ட கணிப்பு

இதனுடன், ‘மின்னம்பலம்’ வெளியிட்ட தனித்த எக்சிட் போல திமுக கூட்டணி 155 இடங்கள் வரை பெறும் எனவும், அதிமுக கூட்டணி 72 இடங்கள், தவெக 5 இடங்கள் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கணிப்புகளில் வித்தியாசம் இருந்தாலும், திமுக முன்னிலை என்பது பொதுவான கருத்தாகத் தெரிகிறது.

55
.பின்னடைவில் விஜயின் தவெக
Image Credit : Asianet News

.பின்னடைவில் விஜயின் தவெக

மொத்தத்தில், இந்த எக்சிட் போல்கள் தமிழகத்தில் ஆட்சிப் போட்டி தீவிரமாக இருந்தாலும், திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. அதே நேரத்தில் தவெக போன்ற புதிய கட்சிகள் வாக்கு சதவீதத்தில் கனிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை இந்த கணிப்புகள் அரசியல் சூட்டை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். மே 4ஆம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வ முடிவுகளே இந்த கணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
டிவி.கே. விஜய்
தேர்தல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
முந்தும் அதிமுக.. விடாத திமுக.. கொங்கு முதல் டெல்டா வரை.. மண்டல வாரியான கருத்துக்கணிப்பு முடிவுகள்
Recommended image2
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.. மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன?
Recommended image3
Now Playing
கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
Related Stories
Recommended image1
முந்தும் அதிமுக.. விடாத திமுக.. கொங்கு முதல் டெல்டா வரை.. மண்டல வாரியான கருத்துக்கணிப்பு முடிவுகள்
Recommended image2
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved