MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • முந்தும் அதிமுக.. விடாத திமுக.. கொங்கு முதல் டெல்டா வரை.. மண்டல வாரியான கருத்துக்கணிப்பு முடிவுகள்

முந்தும் அதிமுக.. விடாத திமுக.. கொங்கு முதல் டெல்டா வரை.. மண்டல வாரியான கருத்துக்கணிப்பு முடிவுகள்

FOTN தேர்தலுக்கு பிந்தைய கணிப்பின்படி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 124-127 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 89-101 இடங்களைப் பெறும் என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 29 2026, 06:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்
Image Credit : Asianet News

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியாகியுள்ள “FOTN தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள், மாநில அரசியல் சமநிலையை சுவாரஸ்யமான கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளன. சென்னை தலைமையகமாக செயல்படும் Spick Media Network மற்றும் Idam Valam குழுவின் கூட்டு ஆய்வாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஏப்ரல் 23 முதல் 27 வரை நிலைத்தடம் ஆய்வாளர்கள் நேரடியாக வாக்காளர்களை சந்தித்து தகவல்களை சேகரித்துள்ளனர். மொத்தம் 71,447 பேரின் கருத்துக்கள் இதில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 234 தொகுதிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வில், அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 124 முதல் 127 இடங்கள் வரை பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணி 89 முதல் 101 இடங்கள் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக ) 4 முதல் 6 இடங்கள் வரை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவீதத்தில் அதிமுக+ 36.50%, திமுக+ 36.21%, தவெக 21.60% என மிகவும் நெருக்கமான போட்டி நிலவுகிறது.

தெற்கு மண்டலத்தில் கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக+ 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதுடன், திமுக+ 17 இடங்களில் உள்ளது. வாக்கு சதவீதத்தில் திமுக சிறிய முன்னிலை காட்டினாலும், இடமாற்றத்தில் அதிமுக முன்னிலை பெறுவது கவனிக்கத்தக்கது. மேலும் 14 தொகுதிகள் ‘டஃப் ஃபைட்’ நிலையில் உள்ளன. தவெக இங்கு 20%க்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளதே புதிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.

22
மண்டல வாரியான தேர்தல் கணிப்பு
Image Credit : Google

மண்டல வாரியான தேர்தல் கணிப்பு

டெல்டா மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு சிறிய முன்னிலை உள்ளது. திமுகவுக்கு 20 இடங்கள், அதிமுகவுக்கு 18 இடங்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு 8 தொகுதிகள் மிகவும் நெருக்கமான போட்டியில் உள்ளன. தவெக சுமார் 19% வாக்கு பங்கைக் கொண்டுள்ளது. இது நேரடியாக வெற்றியாக மாறவில்லை என்றாலும், இரு முக்கிய கூட்டணிகளின் கணக்கை பாதிக்கும் அளவுக்கு உள்ளது.

கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி வலுவாக முன்னிலை பெற்றுள்ளது. 42 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. திமுக 13 இடங்களுக்கு மட்டுமே சுருங்கும் நிலை உள்ளது. தவெக இங்கு அதிகபட்சமாக 21.50% வாக்கு பங்கைக் கொண்டுள்ளது. இந்த மண்டலம் அதிமுகவுக்கு முக்கிய பலமாக இருக்கும் என கணிப்பு கூறுகிறது.

வட மண்டலத்திலும் அதிமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 30 இடங்கள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. திமுக 12 இடங்களுக்கு மட்டுமே குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கும் தவெக 21%க்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி சுமார் 4% அளவில் தனது வாக்கு வங்கியை நிலைநிறுத்தியுள்ளது.

மொத்தத்தில், இந்த தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தமிழகத்தில் இரு பெரிய கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதைக் காட்டுகின்றன. அதேசமயம், தவெக போன்ற புதிய அரசியல் சக்தி வாக்கு சதவீதத்தில் கனிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாகும் நிலையில், இந்த கணிப்புகள் உண்மையாக மாறுமா அல்லது ஆச்சரியம் ஏற்படுமா என்பது தான் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Related image1
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.. மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன?
Related image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தேர்தல்
திமுக
தமிழக வெற்றி கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.. மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன?
Recommended image2
Now Playing
கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
Recommended image3
Now Playing
நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!
Related Stories
Recommended image1
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.. மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved