- Home
- Tamil Nadu News
- School Holiday : சொளையா 3 நாள் லீவு வருது... அடுத்த தொடர் விடுமுறைக்கு ரெடியாகும் பள்ளி மாணவர்கள்..!
School Holiday : சொளையா 3 நாள் லீவு வருது... அடுத்த தொடர் விடுமுறைக்கு ரெடியாகும் பள்ளி மாணவர்கள்..!
Tamil Nadu School Holiday Update: தமிழ்நாட்டில் ஆயுத பூஜைக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்த நிலையில், அடுத்ததாக மீண்டும் ஒரு தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Tamil Nadu School Holiday Update
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பண்டிகைக் காலம் என்றாலே தனி உற்சாகம்தான். குறிப்பாக செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால் விடுமுறை நாட்களும் அதிகமாக இருக்கும். விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் எனத் தொடர்ந்து பண்டிகைகள் வருவதால், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் இந்த நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வரும் தீபாவளி
2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. பொதுவாகப் பண்டிகைகள் வாரத்தின் வேலை நாட்களில் வந்தால் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், இந்த முறை தீபாவளி ஏற்கெனவே வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், தனியாக ஒரு நாள் விடுமுறை கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஏமாற்றம் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. இருப்பினும், தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நவம்பர் 9ஆம் தேதியும் அரசு விடுமுறையா?
தமிழகத்தில் வழக்கமாக தீபாவளி பண்டிகை நாளுக்கு அரசு விடுமுறை வழங்கப்படுகிறது. அதேசமயம், சில ஆண்டுகளில் பொதுமக்களின் பயண வசதி மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாளும் கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பண்டிகையைக் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் மீண்டும் பணிபுரியும் இடங்களுக்குத் திரும்புவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், தீபாவளிக்கு மறுநாள் நோன்பு அனுசரிக்கும் வழக்கமும் சில குடும்பங்களில் உள்ளது.
இதுபோன்ற காரணங்களால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் கூடுதல் விடுமுறை கோரிக்கை எழுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும், கூடுதல் விடுமுறை தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே இது உறுதி செய்யப்படும்.
3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பு!
தமிழக அரசு நவம்பர் 9ஆம் தேதியை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கும் பட்சத்தில், சனிக்கிழமை விடுமுறை உள்ள பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் லீவு கிடைக்கும். இதன்படி, நவம்பர் 7 முதல் நவம்பர் 9 வரை மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கக்கூடும். சனிக்கிழமை வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளி நிர்வாகத்தின் விடுமுறை அறிவிப்பைப் பொறுத்தே விடுமுறை நாட்களின் எண்ணிக்கை அமையும்.
தமிழக அரசு அறிவிப்புக்காகக் காத்திருக்கும் மாணவர்கள்!
ஏற்கெனவே சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை காரணமாகத் தொடர் விடுமுறையை அனுபவித்த மாணவர்களுக்கு, தீபாவளியிலும் கூடுதல் விடுமுறை கிடைத்தால் அது மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக அமையும். குறிப்பாக, வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் குடும்பங்களுக்கு இந்தக் கூடுதல் விடுமுறை பயனுள்ளதாக இருக்கும்.
தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஏமாற்றத்தில் இருக்கும் மாணவர்களுக்கு, நவம்பர் 9ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டால் அது உற்சாகமான செய்தியாக அமையும். இதனால் தமிழக அரசின் அடுத்தகட்ட அறிவிப்பை மாணவர்களும் பெற்றோர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

