School Holiday:டிசம்பர் 13ம் தேதி பள்ளி, கல்லூரி மட்டுமல்ல அரசு அலுவலத்திற்கும் விடுமுறை! வெளியானது அறிவிப்பு!
Tiruvannamalai Deepam Festival School Holiday: திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விடுமுறை அனுசரிக்கும். டிசம்பர் 21ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tiruvannamalai Temple
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றத்து தொடங்கியதை 10 நாட்கள் நடைபெற்று வரும் இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் இரவு வேளையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
Tiruvannamalai Deepam Festival
விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 13ம் தேதி அதிகாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபம் 6 மணிக்கும் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை முதல் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியானது சூப்பர் அறிவிப்பு! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
School Holidays
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2024-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
School Working Day
மேலும் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் நாளை உள்ளூர் விடுமுறையாக அனுபவிக்கும் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களும் மேற்படி அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு பதிவாக 2024-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21 ஆம் நாள் சனிக்கிழமை அன்று இயங்கும்.
இதையும் படிங்க: Deepam Festivel: திருவண்ணாமலை மலை உச்சியில் நிலச்சரிவு? மகா தீபம் ஏற்றப்படுமா? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
Government Employee
மேலே அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை தினம் மாற்றியல் தாள்முறி கூடம் 1881 (மத்திய சட்டம் XXVI / 1881) ன் கீழ் வரும் பொது விடுமுறை இல்லை என்பதால், 2024ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13-ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவித்துள்ளார்
.