பக்தர்களுக்கு குட் நியூஸ்.! திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! விடுதி கட்டணம் கிடு கிடுவென குறைப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் யாத்ரி நிவாஸ் விடுதியின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இருவர் தங்கும் அறைகள், டார்மெட்ரி அறைகளின் கட்டணமும் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
tiruchendur
திருச்செந்தூர் கோயில் பக்தர்கள் கூட்டம்
தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கில் கோயில்கள் உள்ளது. அதிலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள் தோறும் பல ஆயிரம் பேர் தரிசனம் செய்ய பல மாவட்டங்கள் மற்றும் பல நாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் திருச்செந்தூரில் தங்கி கோயிலில் வழிபாடு நடத்திட ஏதுவாக அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி செல்வார்கள்.
இந்தநிலையில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் சொந்தமான இடத்தில் ரூ.48.36 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட யாத்ரி நிவாஸ் விடுதியானது கட்டப்பட்டுள்ளது. புதிய பக்தர்கள் தங்கும் விடுதியினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருச்செந்தூர் கோயில் யாத்ரி நிவாஸ்
இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இரண்டு பேர் தங்கும் அறைகள், 9 பேர் தங்கக்கூடிய 16 அறைகள் மற்றும் 7 பேர் தங்கக்கூடிய கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியானது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த விடுதிக்கான முன்பதிவு கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
விடுதி கட்டணம் குறைப்பு
இந்த விடுதி கட்டணமானது தனியார் விடுதிகளோடு ஒப்பிடுகளையில் மிகவும் அதிகமாக இருப்பதாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து பக்தர்கள் வருகையும் குறைந்தது. இந்த நிலையில் திருச்செந்தூர் யாத்ரி நிவாஸ் விடுதி கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதன் படி தற்போது சபரிமலை செல்லும் பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு அதிகம் அளவில் வந்து செல்கிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு தற்போது குட் நியூஸ் வெளியாகியுள்ளது.
tiruchendur murugan temple
கட்டணம் எவ்வளவு தெரியுமா.?
திருச்செந்தூர் திருக்கோயில் யாத்ரி நிவாஸ் விடுதியில் இருவர் தங்கும் அறைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 1,800ல் ரூபாயில் இருந்து 1,600 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களில் 2000 ரூபாயில் இருந்து 1,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thiruchendur
பக்தர்களுக்கு குட் நியூஸ்
மேலும் திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழா நாட்களில் 2400 ரூபாயில் இருந்து 2,200 ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல 7 பேர் தங்கக்கூடிய கட்டில்கள் கொண்ட டார்மட்ரி அறைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை ஏற்கனவே வாங்கப்பட்டு வந்த 3500 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளாதகவும், வார விடுமுறை நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 4,200 ரூபாயில் இருந்து 3800 ரூபாயாக குறைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல 9 படுக்கைகளை கொண்ட அறைக்கட்டணமும் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.