- Home
- Tamil Nadu News
- சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை! திமுகவை வீழ்த்த இது தான் வழி! கஸ்தூரி சொல்லும் ஐடியா!
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை! திமுகவை வீழ்த்த இது தான் வழி! கஸ்தூரி சொல்லும் ஐடியா!
விஜய் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், திமுக கூட்டணி 2026-ல் மைனஸ் ஆகும் என கஸ்தூரி கூறியதாகவும், உதயநிதி விஜய்யை விமர்சித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

TVK Vijay
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசுகையில்: மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கான அடிப்படை சமூக நீதி பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களின் சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ம் மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என்றார். இவரது பேச்சு தமிழக அரசியல் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இதற்கு திமுக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
Kasthuri
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை கஸ்தூரி: 2026 தேர்தலில் கூட்டணி கணக்கை வைத்து திமுக வென்று விட நினைப்பது மைனஸ் ஆகும் என விஜய் தெரிவித்திருக்கிறார். அது நடந்தால் அவர் வாயில் நான் சர்க்கரை போடுவேன்.
Aadhav Arjuna
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒன்று திருமாவளவன் இருக்க வேண்டும் அல்லது ஆதவ் அர்ஜூனா இருக்க வேண்டும் என்ற நிலை தான் உள்ளது. இரண்டு பேரும் விசிகவில் இருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. திமுக கூட்டணி எம்.பி.யாக இருக்கும் திருமாவளவன் அக்கூட்டணியை விட்டு வெளியே வருவாரா எனத் தெரியவில்லை.
Udhayanidhi
சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என உதயநிதி கூறுவது தனது ரெட் ஜெயன்ட் மூவிஸை கூறுகிறார் போல. உதயநிதிக்கு தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிதல்ல. இன்று விஜய்யை பற்றி பேசியுள்ளார். தமிழகத்தில் உதயசூரியனுக்கு மாற்று இரட்டை இலை தான் என 60 ஆண்டு காலமாக இருந்து வந்தது.
kasthuri Vs Seeman
நான் ஜெயிலுக்கு சென்றபோது எனக்கு முதல் ஆதரவு குரல் கொடுத்தது சீமான் தான். அவருக்கு தெரிவிக்கும் நன்றியின் வெளிப்பாடாக ஒன்று சொல்கிறேன். சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை திமுகவை வீழ்த்த அவர் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும். தமிழ்நாட்டில் திமுக அரசு மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். 2026 தேர்தலில் ஒரு கட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போராடி வருகின்றனர். அனைத்து கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.