- Home
- Tamil Nadu News
- ஸ்டாலின் சொல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை! எலக்சன் டைம்ல இந்துக்கள் வைப்பாங்க உங்களுக்கு ஆப்பு! வானதி சீனிவாசன் சரவெடி!
ஸ்டாலின் சொல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை! எலக்சன் டைம்ல இந்துக்கள் வைப்பாங்க உங்களுக்கு ஆப்பு! வானதி சீனிவாசன் சரவெடி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் உத்தரவிட்டும், திமுக அரசு காவல்துறை மூலம் தடுத்து நிறுத்தியதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது திமுக அரசின் இந்து விரோத போக்கையும் நீதிமன்ற அவமதிப்பை காட்டுகிறது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம்
திருப்பரங்குன்றத்தில் திமுக அரசின் காவல்துறை நடத்திய பேயாட்டத்தின் மூலம், திமுக அரசு இந்து விரோத அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என தேசிய மகளிரணி தலைவரும், பாஜக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதாவது "காலங்காலமாக கார்த்திகை தீபத்தின் போது தீபம் ஏற்றப்பட்டு வந்த, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்" என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கடமையாகும்.
தமிழக காவல்துறை அராஜகம்
ஆனால், கோவில் மரபுகளை காக்க வேண்டிய, திருவிழாக்களை முறைப்படி நடத்த வேண்டிய கோவில் நிர்வாகமே, "தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்" என்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. அதை ஏற்காத உயர்நீதிமன்றம், "தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தது. ஆனாலும், தீபம் ஏற்ற கோவில் நிர்வாகமும், மாநில அரசின் இந்து சமய அறநிலைத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் உதவியுடன் தீபம் ஏற்ற மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது. அப்படி சென்ற மனுதாரர்களையும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரையும் தடுத்து நிறுத்தி தமிழக காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்து விரோத அரசு
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு இல்லாமல் காவல்துறை இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. எதற்கெடுத்தாலும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று முழங்குகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஆனால் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்திருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் திமுக அரசின் காவல்துறை நடத்திய பேயாட்டத்தின் மூலம், திமுக அரசு இந்து விரோத அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளுக்காக பெரும்பான்மையின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி உள்ளது. இந்துக்கள் மதத்தின் அடிப்படையில் வாக்களிக்க மாட்டார்கள். மற்ற மதத்தினர் மதத்தின் அடிப்படையில் வாக்களிப்பார்கள்.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
எனவே, அவர்களின் மனம் நோகக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்துக்களை, இந்து கடவுள்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவமதித்துள்ளார். நடப்பவை எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தகவல் தொழில்நுட்ப யுகம். களத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் நன்கு அறிவார்கள். இந்து விரோத திமுக அரசுக்கு உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என வானதி சீனிவாசன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

